Header Ads



தமது பெற்றோரை கண்டறியாத 4000 இலங்கையர்கள் - களத்தில் குதிக்கிறது சுகாதார அமைச்சு

தமது பெற்றோரை கண்டறிய முடியாத சுமார் 4000 இலங்கையர்கள் நெதர்லாந்து, டென்மார்க், சுவிஸ்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.

இவர்களுக்கு தமது பெற்றோரை கண்டறிவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நெதர்லாந்து வெளிநாட்டு தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதுவர் Joanne Dornewaard மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் இடையில் சுகாதார அமைச்சில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது நெதர்லாந்து வெளிநாட்டு தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை பிள்ளைகளுக்கு தமது பெற்றோரை கண்டறிவதற்காக கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்துடன் தொடர்புகொண்டு DNA பரிசோதனைகள் செய்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று தெரிவித்தார்

இதற்காக இப்பிள்ளைகள் தொடர்பிலான தரவுகள் சேகரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு பிரச்சார வேலைகளை மேற்கொள்வதுடன் DNA பரிசோதனையும் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரின் இந்த கூற்றை அடுத்து வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பிள்ளைகளின் தரவுகளை களஞ்சியப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு தரவுகள் களஞ்சியப்படுத்திய இரு பிள்ளைகள் நெதர்லாந்திலிருந்து நேற்று பிற்பகல் சுகாதார அமைச்சரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.