Header Ads



இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள், 2020 இல் விண்ணுக்கு பாய்கிறது

இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்பத்திலான செயற்கைக்கோள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக சீனாவின் சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்பொருட்டு இலங்கை சார்பில் ஆதர்சி க்ளாக் மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேவையான தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பில் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்று கொள்ளும் பொருட்டு ரஷ்யாவுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சமாரா கிரகண தொழில்நுட்ப ஆய்வு கூடத்துடன் இவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

இதன்படி இலங்கை தமது பிரதான நனோ தொழில்நுட்பதுடனான செயற்கை கோள் வடிவமைப்பு பணிகளை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி 2020ஆம் ஆண்டு அதனை விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்கை கோளின் ஊடாக தொலைத்தொடர்பு புகைப்படம் காலநிலை தகவல்கள் அதுபோல தொழில்நுட்ப தகவல்கள், ஆழிப்பேரலைத் தகவல்கள் போன்றவற்றை பெற்று கொள்ளமுடியும்.

1 comment:

  1. அப்போ மகிந்தவின் 3வது பேபி அனுப்பியது முதலாவது இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.