Header Ads



ஜிந்தோட்டயில் 127 அசம்பாவிதங்கள், தற்போதைய நிலவரம் என்ன..?

காலி கிந்­தோட்டை பகு­தியில் சிங்­கள முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட முறுகல் நிலைமை வன்­மு­றை­யாக மாறி­யதால் மொத்­த­மாக 127 அசம்­பா­வித சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. பொலிஸ் விசா­ர­ணைகள் ஊடாக இவை தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர  தெரி­வித்தார். இந்­நி­லையில் இவை தொடர்பில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன அழ­கக்­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டில் இடம்­பெறும் விஷேட விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் இந்தச் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் கைது செய்­யப்­ப­டுவர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே கிந்­தோட்­டையில் நில­விய பதற்றம் மற்றும் பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஆகி­யன கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில் அப்­ப­கு­தியின் பாது­காப்­புக்கு சிறப்­புத்­திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி கிந்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட  கிந்­தோட்டை மேற்கு, கிந்­தோட்டை கிழக்கு, குருந்­து­வந்த, மஹ­ஹப்­பு­கல, வெலி­பிட்டி, மோதர, உக்­வத்த, பிய­தி­கம ஆகிய 7 கிரா­ம­சே­வகர் பிரி­வு­களும் மூன்று வல­யங்­க­ளுக்குள் உள்­ள­டங்கும் வகையில் பிரிக்­கப்­பட்டு ஒவ்­வொரு வல­யத்தின் பாது­காப்பும் ஒரு உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் பொறுப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.  

அதன்­படி கிந்­தோட்டை பகு­தியில் நேற்று மாலை ஆகும்­போதும், 102 கடற்­ப­டை­யினர், 74 இரா­ணு­வத்­தினர், 428 பொலிஸார் மற்றும் 100 அதி­ரடிப் படை­யினர் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்தப் பட்­டி­ருந்­தனர்.

No comments

Powered by Blogger.