Header Ads



இலங்கையில் 100 வயதைத் தாண்டியும் வாழும் 350 பேர்

100 வயதைத் தாண்டிய 350 பேர் இலங்கையில் வாழ்ந்து வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று -08- பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் நூறு வயதைக் கடந்த 350 பேர் வாழ்கின்றனர்.

100 வயதைக் கடந்த முதியோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு ஒன்று மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சிறந்த முயற்சி. அவசரமாக நடைமுறைக்கு வருமானால் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சிதான் ஆனால் 5000/= வில் என்னதான் செய்யமுடியும் ?
    வெறும் 350 பேர்தானே அத்தொகையை இரண்டு அல்லது மடங்காக அதகாரித்தாலும் அரச கஜானவுக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பதில்லை. மக்களும் வரவேற்பார்களே தவிர எதிர்க்கமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.