Header Ads



"அடே பசில்" போட்டுத்தாக்கும் மகாராஜா MTV

Mr.10% (மிஸ்டர் டென் பெர்சன்ட்) என அழைக்கப்படுபவரும்,ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் முடிவுகள் வௌியானவுடன் மூட்டை முடிச்சுக்களுடன் நாட்டை விட்டு தப்பியோடியவருமான அமெரிக்க பிரஜை பசில் ராஜபக்ஸ நேற்று (08) நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு கருத்து வௌியிட்டார்.

இந்த நாட்டின் ஔிபரப்பு உரிமையை வழங்கும் ஃப்ரீ கவுன்சில் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற அலைக்கற்றை, அன்று தாமரைக் கோபுரத்தை நிர்மாணித்து சுனாமி வந்தாலும் எமது தொலைதொடர்பு சீர்குலையாத வண்ணம் அமைக்கப்படவிருந்த அலைக்கற்றைகளை மகாராஜா நிறுவனத்திற்கு திரை மறைவில் வழங்கினர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நீங்கள் ஹெல்பின் ஹம்பன்தோட்டையில் மயிரிழையில் தப்பியதை மறந்து விட்டீர்களா?

மூன்று நான்கு பேரை சூழ வைத்துக் கொண்டு சண்டியரைப் போல் கதைக்கும் நீங்கள், ஜனாதிபதி தேர்தலில் சொந்த அண்ணனையே தோல்வியடைய செய்து மூட்டை முடிச்சிகளுடன் அமெரிக்காவிற்கு தப்பியோடியதை மறந்து வீட்டீர்களா?

மஹிந்த ராஜபக்ஸவின் சிம்மாசனத்தை இழக்கச் செய்து கட்சி ஆதரவாளர்களையும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீதியில் நீர்க்கதியாக்கிவிட்டு நீங்கள் தப்பியோடிய விதத்தை அமைச்சர் விஜயமுனி சொய்சா அம்பலப்படுத்தியதை மறந்து விட்டீர்களா?

நீங்கள் மறந்த அநேகமானவை எமக்கு நினைவில் உள்ளது…..

மல்வானையில் உரிமையாளர் இல்லாத மாளிகை, விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ட்ரக்டர், ஏன் பசுக்கள், அது மட்டுமல்ல ஏழை மக்களுக்கான சமுர்த்தி அட்டையையும் சுரண்டியதாக உங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நாம் மறக்கவில்லை.

முன்னாள் அமைச்சரே, ஏன் சர்வதேச சமூகம் Mr.10% என உங்களை அழைத்ததை மறந்து விட்டீர்களா.

கம்பியுட்டர் ஜில்மாட் தொடர்பிலும் அந்தக் காலத்தில் பேசப்பட்ட விடயங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவிய நீங்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தாவி தற்போது அங்கிருந்து தாமரை மொட்டுக்கு தாவியுள்ளீர்கள்.

கையாளாகாத பசில் என நாம் அல்ல, உங்களது குடும்பத்தாரே கூறுகின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் வௌிப்படையாக உங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எவருக்கும் பலனற்ற, காலத்தை வீணடிப்பவனை எமது கிராமத்தில் புறம்போக்கன் என்றே கூறுவார்கள்.

உடல் முழுவதும் தாயித்துக்களை கட்டிக்கொண்டு கடவுளிடம் மன்றாடினால் மாத்திரம் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் கிடைக்காது என்பதை நாம் உங்களுக்கு நினைவுப்படுத்துகின்றோம்.


திடீரென மேலங்கியின்றி யாழ்ப்பாணத்தில் கந்தனை வழிபட்டு செய்த குற்றங்களுக்கு பாவமன்னிப்பு கோரவா சென்றீர்கள்.

அல்லது அந்த செயற்பாடு வழமையான சந்தர்ப்பவாத கீழ்த்தரமான அரசியல் குண்டா?

ஆனால் முன்னாள் அமைச்சரே உங்களது சந்தர்ப்பவாத செயற்பாடுகளை வடக்கு மக்களும் தென் பகுதி மக்களும் தற்போது நன்கு உணர்ந்துள்ளதை நினைவிற்கொள்வதே மேலானது.

இன்று எம்மை நோக்கி விரலை நீட்டும் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்த துன்புறுத்தல்களை ஒருநாளும் நாம் மறக்கப்போவதில்லை.

நீங்ள் அலரி மாளிகையில் குளு குளு அறையில் வௌிநாட்டு உணவினால் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கையில் நாட்டு மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிபடுத்துவதற்காக நாம் தெபானமவில் அமைத்த நவீன வசதிகளுடன் கூடிய கலையகத்திற்குள் குண்டர்கள் புகுந்து துவம்சம் செய்தனர்.

இன்று சுனாமி தொடர்பில் கூறும் நீங்கள், அன்று ஹெலிகொப்டரில் சென்று சுனாமியை கண்டுகளித்த போது சிரச ஊடகம் மக்களுடன் மக்களாக வீதியில் இறங்கி அவர்களுக்கு உதவிகளை வழங்க முன்வந்த விதத்தை நீங்கள் மறந்து வீட்டீர்களா?

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒருபுறமிருக்க ஹெல்பின் ஹம்பாந்தோட்டை கணக்கு ஊடாக கிடைத்த பணம் சூறையாடப்பட்டதாக உங்களது ஆட்சி காலத்தில் இருந்த பிரதமர நீதியரசர் பகிரங்கமாக கூறியதை நாட்டு மக்கள் இன்னமும் மறக்கவில்லை.

திவிநெகும சட்டம் ஊடாக பணத்தை ஏப்பம் விடுவதற்கு இடமளிக்காத எமது நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசரை எட்டாம் ஆண்டில் கூட சித்தியடையாத உங்கள் கைம்பொம்மைகளை பயன்படுத்தி வீட்டுக்கு அனுப்பிய நாள் எமது நாட்டு வரலாற்றில் கறுப்புப் புள்ளியாகும்.

தேர்தல் முறைமையை மாற்றுவதாக கூறி உங்களுக்கு சாதகமாக எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக சட்டங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்றும் எமது நாட்டில் தேர்தலை நடத்த முடியாதளவிற்கு சிக்கலுக்கு வழிகோளியுள்ளது.

பசில் ராஜபக்ஸ முன்னாள் அமைச்சரே…

ஒரு சில விடயங்களை மாத்திரமே இங்கு பதிவிட்டோம்…

எம்மை நோக்கி நீங்கள் ஒரு விரலை நீட்டும் போது எஞ்சிய விரல்கள் உங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் விதத்தை பாருங்கள்.

2015 ஜனவரி எட்டாம் திகதி வெற்றி தொடர்பில் நீங்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள் மற்றும் நீங்கள் கலந்துகொண்ட இரவு விருந்துகள் தொடர்பில் பின்னர் கதைக்கலாம்.

ஏழை மக்களின் பசு முதற்கொண்டு சமுர்த்தி அட்டை வரையும் நாட்டுக்கு பயன்தரும் பாரியளவிான முதலீட்டுத் திட்டங்களின் ஊடாகவும் எவ்வித வெட்கமும் இன்றி ஏப்பம் விட்ட கொமிஸ் அடித்த உங்களைப் போன்றோரை நாட்டு மக்கள் ஏற்கனவே ஓரங்கட்டி விட்டார்கள்.

வரலாறு உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்.

உங்களது காலம் முடிந்து விட்டது.

அடே பசில்!!! இவர்கள் என்ன கூறுகிறார்கள் என எவரேனும் கேட்டால் அதற்கு நீங்களே பதிலையும் சொல்லவேண்டும்…

மக்கள் மீண்டும் உங்களை விட்டியடிக்கும் வரை காலம் தாழ்த்தாது நாட்டுக்கு பாவத்தை சேர்க்காது உங்கள் நாடான அமெரிக்காவுக்கே மீண்டும் சென்றுவிடுங்கள்…

3 comments:

  1. அருமையான விமர்சனம்.இது போன்ற விடயங்களை அடிக்கடி இந்த இணையத்தளத்தில் பிரசுரிந்து அடிக்கடி மறதியும் மடத்தனமுமிக்க இந்த நாட்டு மக்களை சரியான இலக்கில் வழிநடாத்த உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. இதே போல் மஹாராஜா கம்பெனி முஸ்லீம் மக்களுக்கு காட்டும் பாரபட்சமான நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து ஒளிபரப்பு செய்வீர்களா ?

    ReplyDelete
  3. The behind the scene activities of the minister may have been brought to the light. But, this is too much. Media also should not have such a totalitarian attitude. The TV channels of this group have not proved to be neutral.

    ReplyDelete

Powered by Blogger.