Header Ads



IS பயங்கரவாதிகளின் கதை முடிவுக்கு வருகிறது - சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும்

ஈராக்கில்  (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான சிரியாவின் எல்லையை ஒட்டிய பிரதேசத்தை கைப்பற்றும் படை நடவடிக்கையை ஈராக் இராணுவம் நேற்று ஆரம்பித்தது.

“ஐ.எஸ் உறுப்பினர்கள் சரணடைவது அல்லது மரணம் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்” என்று அல் கயிம் மற்றும் ரவா பகுதியில் படை நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

இதனையொட்டி ஈருக்கிய விமானப்படை அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வானில் இருந்து போட்டு போராளிகளுக்கு சரணடையும்படி கூறியது. மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறும்படி பொதுமக்கள் கோரப்பட்டனர்.

ஐ.எஸ் வசமிருக்கும் எல்லையின் சிரியா பக்கமும் அந்த குழுவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனினும் அங்கு அமெரிக்க ஆதரவு குர்திஷ் படை மற்றும் சிரிய அரச படை இரு முனைகளால் நடத்தும் தாக்குதலால் ஐ.எஸ் வேகமாக பின்வாங்கி வருகிறது.

சிரியா மற்றும் ஈராக்கை இணைத்து ஐ.எஸ் தன்னிச்சையாக வெளியிட்ட கிலாபத் அரசு கடந்த ஜுலையில் மொசூல் நகர் வீழ்த்தப்பட்டதை அடுத்து தோல்வி கண்டது. மொசூல் நகர் ஈராக்கில் அந்த குழுவின் கோட்டையாக இருந்து வந்தது.

மறுபுறம் சிரியாவில் ஐ.எஸ்ஸின் கோட்டையாக இருந்த ரக்கா நகர் அமெரிக்க ஆதரவு படையிடம் ஒரு வாரத்திற்கு முன் வீழ்ந்தது. 

1 comment:

  1. அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கேவலப்படுத்த முனைந்த எவனும் கேவலப்படுத்தப்படாமல் மரணத்தை சுவைப்பதில்லை.

    இதுதான் இந்த ISIS பயங்கரவாதிகளுக்க இங்கு நடக்கிறது. அழிந்து நாசமகப் போங்கள்.

    இதுதான் இவ்வாறான ஆட்சியாளர்களுக்கும் ஒரு நாள் நடக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.