Header Ads



சிறுபான்மை கட்சிகளை நிர்ப்பந்திக்கவில்லை - மறுக்கிறார் ஜயம்­பதி

மாகாண சபைகள் தேர்­தல்கள் திருத்தச் சட்­டத்தில் ஐம்­ப­துக்கு ஐம்­பது சத­வீத கலப்பு தேர்தல் முறை­மையை தான்­தோன்­றித்­த­ன­மாக வலி­யு­றுத்தி சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் நன்­ம­திப்பை இழந்து விட்­ட­தாக ஐக்­கிய இட­து­சாரி முன்­னணி தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன சுட்­டிக்­காட்­டினார்.

முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்த 60சத­வீதம் தொகுதி முறை­மையும், 40சத­வீதம் விகி­தா­சர பிர­தி­நித்­துவ முறை­மை­யையும் கொண்ட கலப்பு முறை­மையை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தால் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் தொகுதி அடிப்­ப­டையில் அதி­க­ரித்­தி­ருக்கும் என  சுட்­டிக்­காட்­டிய அவர் சிறு அர­சியல் கட்­சி­க­ளுக்கு ஐம்­ப­துக்கு ஐம்­பது கலப்பு தேர்தல் முறை­மை­யா­னது நன்­மை­ய­ளிப்­ப­தா­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

அண்­மையில் நிறை­வேற்­றப்­பட்ட மாகாண சபைகள் தேர்­தல்கள் திருத்­தச்­சட்ட மூலம் தொடர்­பாக பல்­வேறு கருத்து வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக சிறு­பான்மை கட்­சிகள் சில இத்­தி­ருத்­தத்­திற்கு வாக்­க­ளிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­ட­தா­கவும் தாங்கள் முழ­மை­யான உடன்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்றும் குறிப்­பிட்­டுள்­ளன.

ஆதே­நேரம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு கிடைத்த வெற்­றி­யா­கவும் ஒரு சில கட்­சிகள் அறி­வித்­துள்­ளன. மேலும் இத்­தி­ருத்தச் சட்ட மூலத்­தினை நிறை­வேற்­றிய முறை­மை­யா­னது தவறு என்று கூட்டு எதிர்க்­கட்­சியும் குற்றம் சாட்டி வரும்  நிலையில் அது­கு­றித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

மாகாண சபை திருத்­தச்­சட்­டத்தில் முழு­மை­யான திருப்தி இல்லை. ஆனாலும் சிறு­பான்மை கட்­சிகள் வாக்­க­ளிப்­ப­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்டோம் என்று கூறு­வது தவ­றா­ன­தொரு விட­ய­மாகும். அவர்­க­ளுக்கு அவ்­வாறு இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் இருந்­தது.  உண்­மையில் பாரா­ளு­மன்­றத்தின் உள்­ளொன்று பேசி­விட்டு பின்னர் பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியில் வேறொன்றைப் பேசு­வது அச­தா­ரண விட­ய­மாகும். இவ்­வா­றான செயற்­பா­டு­களை சிறு­பான்மை கட்­சிகள் மட்­டு­மல்ல பல உறுப்­பி­னர்­களும் செய்­கின்­றார்கள். ஆது தவிர்க்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மொன்­றாகும். 

அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே­நாளில் தேர்­தலை நடத்­த­வ­தற்­காக 20ஆவது திருத்­தச்­சட்ட மூலத்­தினை கொண்டு வந்­தி­ருந்த போதும் அதற்கு உயர்­நீ­தி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தி­ருக்­க­வில்லை.  அதன் கார­ணத்தால் அச்­சட்­ட­மூ­லத்­தினை கைவி­ட­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அவ்­வா­றான நிலையில் ஆயுட் காலம் நிறை­வ­டையும் மாகாண சபை­க­ளுக்கு உட­ன­டி­யாக தேர்­தலை நடத்த வேண்டும். 


அவ்­வாறு உட­ன­டி­யாக தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் தற்­போது நடை­மு­றையில் உள்ள விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை­யி­லேயே நடத்­த­வேண்டும். ஆனால் பல தரப்­புக்கள் அதனை விரும்­ப­வில்லை. தொகுதி முறை­மை­யினை கோரி­னார்கள். பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று கோரி­னார்கள். 

அப்­ப­டி­யென்றால் ஆயட்­காலம் நிறை­வ­டையும் மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை தற்­போ­தைய தேர்தல் முறை­மையில்(விகி­தா­சர முறை­மையில்) நடத்­திய பின்னர் ஏனைய ஆறு மாகா­ணங்­க­ளுக்கும் தேர்­தலை நடத்­தும்­போது புதிய தேர்தல் முறை­மை­யினை அமுல்­ப­டுத்­து­வதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும். ஆனால் அதுவும் அசா­தா­ர­ண­மா­ன­தொரு செயற்­பா­டல்­லவா? ஆகவே தான் மாகாண சபைகள் தேர்­தல்கள் திருத்தச் சட்டம் நிறை­வேற்ற வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டது.

தேர்தல் நடத்­து­வதில் சில மாத கால­த­மாதம் ஏற்­பட்­டுள்­ள­மையை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஆனால் அதனை விட செய்­வ­தற்கு வேறு வழி­யொன்றும் இருக்­க­வில்லை. அத்­துடன் தற்­போது நிறை­வேற்­றப்­பட்ட திருத்­தச்­சட்­டத்தின் பிர­கரம் 50சத­வீதம் தொகுதி வாரி முறைமை, 50சத­வீதம் விகி­தா­சார முறைமை கொண்ட கலப்பு தேர்தல் முறை­மை­யொன்றே நடை­பெ­ற­வுள்­ளது. இதில் பெண்­க­ளுக்கு 25சத­வீத ஒதுக்­கீடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மாகாண சபை தேர்தல் திருத்­தச்­சட்­டத்தில் முதலில் 60சத­வீதம் தொகுதி முறை­மையும் 40சத­வீதம் விகி­தா­சார முறை­மையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை­மை­யொன்றே முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது. இதனை ஆத­ரிக்­கு­மாறு நான் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளி­டத்தில் வணங்­காத குறை­யாகக் கேட்­டுக்­கொண்டேன்.

ஆனால் அவர்கள் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஐம்­ப­தற்கு ஐம்­பது சத­வீதம் அவ­சியம் என்­பதில் உறு­தி­யாக இருந்­தார்கள். இந்த விட­யத்தில் தெளி­ப­டுத்­த­லொன்றைச் செய்து கொள்ள வேண்­டி­யுள்­ளது. நாம் சிறு கட்­சியைச் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்கள். இது­போன்று தான் ஜே.வி.பி.யும் சிறு கட்­சி­யாகும். ஆகவே ஐம்­ப­துக்கு ஐம்­பது சத­வீத கலப்பு தேர்தல் முறை­மையால் எமக்கு பாத­க­மில்லை. நாம் தனி­யாக தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற போது எமது உறுப்­பி­னர்கள் எண்­ணிக்­கையும் அதி­க­மாக கிடைப்­ப­தற்கு வழி­ச­மைக்கும்.

ஆனால் தமிழ், முஸ்லிம், மலை­யக கட்­சி­களின் நிலைமை அவ்­வாறு அல்ல. தொகுதி முறை­மையின் வீதம் அதி­க­மாக காணப்­ப­டு­கின்ற பொது மாவட்டம் ஒன்றில் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிரிக்கும். ஆகக் குறைந்தது ஒரு தொகுதியாவது அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த விடயத்தினை தெளிவு படுத்தியபோது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்ருக்கவில்லை. 

அவர்கள் தாங்கள் எடுத்த முடிவிலேயே உறுதியில் இருந்து தான்தோன்றித்தனமாக செயற்பட்டார்கள். இதனால் இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்து நன்மதிப்பையும் இழந்து விட்டார்கள். என்னைப்பொறுத்தவரையில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தவது சிறந்ததொன்றாக அமையும் என்பதே தனிப்பட்ட நிலைப்பாடு என்றார். 

No comments

Powered by Blogger.