Header Ads



அரச ஊழியர்களில் ஐவரில், ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஐவரில் ஒருவர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அழுத்கம - மொரகல்ல பகுதியில் இன்றைய தினம் -10- இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

"ஒவ்வொரு வருடத்திலும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினம் அனுட்டிக்கப்படுவதோடு, நாம் சுமார் 25 வருடங்களாக குறித்த தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளையும் புதிய வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.

சுகாதார அமைச்சில் மனநல நோய் தொடர்பில் பிரத்தியேக பிரிவு ஒன்று ஆர்ம்பிக்கப்பட்டுள்ளது.

இயங்கிவருகின்ற குறித்த பிரிவின் அறிக்கையின் பிரகாரம் நோக்கினால் அரச பணியாளர்கள் ஐவரில் ஒருவருக்கு மனநோய் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டில் காணப்படும் பிரச்சினைகளும், தொழில் செய்யும் இடத்தில் காணப்படும் பிரச்சினைகளுமே இதற்கு காரணம் எனவும் ஆய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

குழப்பத்தினால் ஏற்படும் மன உளைச்சலே இதற்கு காரணமாகும் என்பதோடு எமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கவனத்தில் கொள்ளவேண்டியது எமது கடமையாகும்" என குறிப்பிட்டுள்ளார்

5 comments:

  1. மனநோயாளிகளில் அதிகமானவர்கள் பா.உ ,மற்றும் அமைச்சர்களே

    ReplyDelete
  2. yes bro..... mostly ministers should admit mental hospital

    ReplyDelete
  3. yesbro..............mostminister should admit aggodamental hospital

    ReplyDelete
  4. Dear Hon. Minister, According to your statement may include the Ministers 9 of 45, Deputy Minsters 9 of 45 and parliament members 45 of 225 are affected. It’s too danger for our nation kindly appoint some special commission to find out them to treat in hospital. Before that we should take away the ministries from them because they’ll not work proper to public.

    ReplyDelete
  5. Dear Hon. Minister, According to your statement may include the Ministers 9 of 45, Deputy Minsters 9 of 45 and parliament members 45 of 225 are affected. It’s too danger for our nation kindly appoint some special commission to find out them to treat in hospital. Before that we should take away the ministries from them because they’ll not work proper to public.

    ReplyDelete

Powered by Blogger.