Header Ads



பூமியதிர்ச்சி ஏற்பட்டு, பாராளுமன்றமே மூழ்க வேண்டும் - விமல் வீரவன்ச

“மக்களின் பணத்தை நாசமாக்கின், நாடாளுமன்றத்துக்கு, யாராவது மேலேவந்து குண்டுவீசாவிடின், பூமியதிர்ச்சி ஏற்பட்டு, நாடாளுமன்றமே மூழ்க வேண்டும்” என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.   

புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“இந்த அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவ்வாறு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், நாடாளுமன்றத்தின் விருப்பமின்றிச் செயற்படுவதற்கு, மக்கள் வாக்களிக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

“நாட்டைச் சீர்குலைப்பதற்கு, நாடாளுமன்றத்தை மோசடியான முறையில் பயன்படுத்துகின்றனர்.

 அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பலவற்றையும் நாங்கள் எடுப்போம்” என்றார். “நாட்டைப் பிரிக்கும் அரசமைப்புக்கு எதிராக நாங்கள் செயற்படுவோம். அதற்கு ஒருபோது இடமளிக்கமாட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

3 comments:

  1. Trying escape from the word he used to BOMB the parliment. Many of his supporters too started to make statements to make his statement a normal one.

    BUT the statement is very dangerous. Now he is trying call Natural disastrous... But before he said BOMBING.. is very serious.. Hope Judiciary system will act as per his serious word.

    ReplyDelete
  2. இன்னும் தாமதிக்காது இவனை மனநோயாளர் வைத்தியசாலையில் சேர்ந்து சரியான சிகிச்சை அளிக்க எதிர்க்கட்சிக்கு முடியாவிட்டால் அரசாங்கமாவது அந்த பணியை நாடு மக்கள் நலன்கருதி உடனடியாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

    ReplyDelete
  3. Hon Weerawansa,

    If that happened you will have no place for your survival or existence. It is not only for you but also for some of your colleagues with the same calibre.

    Therefore pray your God not to happened that as it is better for you and your colleagues .

    ReplyDelete

Powered by Blogger.