Header Ads



சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தினால், விடுக்கப்பட்டுள்ள அறிக்கை

வடபுல முஸ்லிம் சமூகம் 1990ல் இனச் சுத்திகரிப்புக்குள்ளாகி 27வது வருட நினைவாக யாழ்,முஸ்லிம் சமூகம் (சர்வதேசம்) JMC - I  எமது அமைப்பினால் விடுக்கப்படும் அறிக்கை

1990 ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ்,முஸ்லிம் சமூகத்தை இரு மணி நேர அவகாசத்தில் அவர்களது தாயக பூமியிலிருந்து  வாழ்வுரிமையையும்,வாழ்வாதாரங்களையும் பறித்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு செய்தனர் தமிழீல விடுதலை புலிகள்.

தமிழ் இனத்தின் மனித உரிமைகள், இனத்தின் பேரால்,மொழியின் பேரால்,பிரதேசத்தின் பேரால்  பறிக்கப்படுகின்றன,எமது இனம் முழுமையான அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ளது என ஆயுதத்தை கையிலெடுத்து போராடிய விடுதலை புலிகள் தனது முழுமையான கட்டுப்பாட்டு பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து கொண்டிருந்த இன்னொரு இனமான முஸ்லிம் சமூகம் மீது, மதத்தின் பேரால் பிரித்தெடுத்து ஆயுத முனையில் அவர்களது வாழ்வுரிமையையும்,வாழ்வாதாரங்களையும் பறித்து இரு மணிநேர கால அவகாசத்தில் வெளியேற்றியமை 20ம் நூற்றாண்டில் நடந்த மிக மோசமான மனித உரிமை அபகரிப்புக்கான வரலாற்றுப் பதிவாகும்.

அன்று யாழ்,முஸ்லிம் சமூகம் வெளியேற்றப் பட்ட போது இலங்கை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கின்றது என்பதை சர்வதேசத்திற்கும்,தென்னிலங்கை பெரும்பான்மை சமூகத்திற்கும் கூறிக் கொண்டிருந்ததது,அதனால் சாதாரணமாக ஒரு நாட்டில் மனித சமூகத்திற்கு இடர் ஏற்படும் போது வழங்கக்கூடிய ஆகக் குறைந்த நிவாரணங்களோ,தற்காலிக முகாம் வசதிகளோ யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு அன்றைய இலங்கை அரசாங்கத்தால் உடனடியாக வழங்க்ப்படவில்லை.

ஆக, அன்று 1990 ஒக்டோபரில் இலங்கையின் யாழ்ப்பாணத்திலே தமிழீல விடுதலை புலிகளின் அன்றைய அரசியல் பொறுப்பாளர் யோகி தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிபுக்குள்ளாக்கப்பட்டதை நியாயப்படுத்தி பொய்யுரைகளை கூறி தமிழ் மக்கள் புலிகள் மீது திரும்பாமல் சிறு,சிறு கூட்டங்களையும்,அறிக்கைகளையும் விடுத்துக் கொண்டிருந்த போது,இலங்கை அரசின் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்ஞன் விஜேரத்ன யாழ்ப்பாணம் எமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது விடுதலை புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றவில்லை,ஒரு சில முஸ்லிம் குடும்பங்கள் தமது பாதுகாப்பிற்காக சுயமாக வெளியேறுகிறார்கள் என வெளிநாட்டுக்கும்,தென்னிலங்கை சிங்கள சமூகத்திற்கும் பொய்யுரை கூறிக் கொண்டிருந்தார்.

அன்று எந்த விதமான அரச நிவாரணங்களும்,உதவிகளும் உடனடியாக வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்காத போது இலங்கையின் முழு முஸ்லிம் சமூகமும்,பள்ளிவாசல் நிர்வாகங்களும்,முஸ்லிம் அமைப்புக்களும் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம் சமூகத்தை பொறுப்பேற்று தேவையான முழு உதவிகளையும் செய்து கொடுத்தனர்.

இன்றும் நாம் அதனை நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

1981ம் ஆண்டின் அரச உத்தியோகபூர்வமான கணக்கெடுப்பின் பிரகாரம்,யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் 14844 முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர்.1990 ஒக்டோபர் இனச்சுத்திகரிப்பின் போது இத்தொகை 20000த்தை அண்மித்திருக்கும்.ஆனால் இன்று யாழ்,முஸ்லிம்களின் எண்ணிக்கை 35000த்தை தாண்டியிருக்க முடியும்.

யுத்தம் முடிவுற்ற பின் மீள்குடியேற்றத் திட்டம் வகுக்கப்படும் போது 2009ல் யுத்தத்தால் வெளியேறிய தமிழ் மக்கள் புதிய அகதிகள் என்றும்,1990ல் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்கள் பழைய அகதிகள் என்றும் பிரிக்கப்பட்டு புதிய அகதிகளுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்ட போது பழைய அகதிகள் என்று முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்டனர்.
யாழ்,முஸ்லிம்களது வாக்குகள் யாருக்கும் தேவைப்படாததினால் சகல மட்ட அரசியல்வாதி களாலும் யாழ்,முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்டனர்.இன்று இலங்கை வாழ் சமூகங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்ற சமூகமாக  யாழ்,முஸ்லிம் சமூகம் அகதிகளாகவும்,அரசியல் அனாதைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி சகலவற்றையும் இழந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக சீரான சமூக அமைப்பின் வாழ்வின்றி,தத்தளிக்கும் யாழ் முஸ்லிம் சமூகம் மறக்கடிக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முழுமையான தார்மீக பொறுப்பைக் கொண்டுள்ள வடமாகாண சபையும்,யாழ் அரச அதிகாரிகளும் யாழ் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம்,வீடமைப்பு திட்டம் என்று வரும் போது இறுக்கமான கட்டுப்பாடு களையும்,விதி முறைகளையும் கடைப்பிடிக்கின்றமை கவலைக்குரியதும்,கண்டனத்துக்குரியதுமாகும்.


முடிவாக எமது யாழ்,முஸ்லிம் சமூகம் (சர்வதேசம் ) எனும் அமைப்பின் கோரிக்கைகள் முன் வைக்கப் படுகின்றன.

1. 
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போது இனப்படுகொலையொன்று நடந்ததை உணர்ந்தவர்கள் நாம்,வட மாகாண சபை இனப் படுகொலை என தீர்மானம் மேற்கொண்டது போல் 1990 ஒக்டோபரில் வடபுல முஸ்லிகளுக்கு நடந்தேறிய பலவந்த வெளியேற்றம் இனச்சுச்திகரிப்பு தான் என வட மாகாண சபை தீர்மானம் மேற் கொள்ள வேண்டும்

2.  
1990 ஒக்டோபரில் இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்ட யாழ்,முஸ்லிம் சமூகமும்,அவர் தம் சந்ததியும் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற முழுமையான உரித்துடயவர்கள் என்பதை இலங்கை அரசும்,வடமாகாண சபையும் கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.   இவ்வாறான ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் இலங்கை அரசானது யாழ்,முஸ்லிம்களது இனச்சுத்திகரிப்பு,அவர்களது இன்றைய நிலை,மீள்குடியேற்றத்திற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ,தொடர்பாக விசாரனையையும்,ஆய்வையும்,சிபார்சுகளையும் மேற்கொள்ளக்கூடிய ஒரு ஜனாதிபதி விசாரனை கமிஷன் நியமிக்கப்பட வேண்டும்.                    இது கால வரையறையைக் ( time frame )கொண்ட விசாரனை கொமிஷனாக இருக்க வேண்டும்.

3. 
யாழ்,முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்,அவர்கள் நீண்ட காலமாக புறக்கனிக்கப் பட்டு வருகின்ற நிலைமைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு விரைவானதும்,இலகுபடுத்தப் பட்டதுமான அவர்களுக்கான விசேட மீள்குடியேற்ற திட்டம் வகுக்கப் பட்டு அமுல் படுத்தப்பட வேண்டும்.

4.  
யாழ்,முஸ்லிம்களின் இழப்புக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ஏனெனில் யாழ்,முஸ்லிம்கள் இந்த 27 வருட கால அவதியுறும் வாழ்க்கையில் அனுபவித்த அல்லது கிடைத்த உதவிகள் மிகச் சொற்பமானதே.

5.
யாழ்,முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்றம் நடைமுறைக்கு வரும்வரை நிறுத்தப்பட்ட உலர் உணவு நிவாரணம் தொடரப்பட வேண்டும்.

இறுதியாக மேலே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்படுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எமது யாழ்,முஸ்லிம் சமூகம் ( சர்வதேசம் ) எனும் அமைப்பு இலங்கைக்குள்ளும்,சர்வதேச மட்டத்திலும் தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ளுமென திடசங்கற்பம் கொள்கின்றது.

8 comments:

  1. நல்லதோர் முன்னெடுப்பு. அனைத்து நாடுகளதும் தூதுவர்களுக்கும் மற்றும் ஐ.நா வின் அனைத்து முகவராண்மைகளுக்கும் இதன் பிரதிகளை அனுப்புவதுடன் இவற்றிலுள்ள எமக்கு ஆதரவானவர்களையும் நடுநிலையாளர்களையும் பயன்படுத்தி தொடர் அழுத்தங்களையும் வரங்கிவருவதும் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. UN போன கிழமை தான் சொல்லியது இது ஒரு "விரட்டியடிப்பு" என்று. எனவே நீங்கள் சொல்லிதிரியும் "இனசுத்திகரிப்பு" என்பதை UN மறுத்து விட்டது,

      Delete
    2. அந்தோனி!
      விரட்டியடிப்பு, இனச்சுத்திகரிப்பு என அது எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் அவ்வாறான எதுவும் முஸ்லிம்களின் மீது இனி நடக்கக்கூடாது என்பதற்கான முன் ஏற்பாடுதான் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு.

      Delete
    3. யுத்த காலத்தில் பல லட்சம் பேர் சொந்த நிவகளிலிருந்து விரட்டப்பட்டாரகள். இதில 3 இனங்களும் அடக்கம். தமிழ்ரகள் தான் அதிகம்.

      எனவே இதற்கும் வ/கி இணைப்புக்கும் சம்மதமில்லை.

      Delete
    4. Revenge LTTE fools

      Delete
  2. பாசிச தமிழ் பயங்கரவாதிகளின் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு சர்வதேச மயப்படுத்தப் பட வேண்டும்.

    ReplyDelete
  3. அஐன் அந்தோனிராஜ் அவர்களே நீங்கள் கூறியதுபோல் போனகிழமை UN கூறியது உண்மைதான் முதலில் ஒன்ற விளங்கிக் கொள்ளுங்கள் UN சட்டத்தில் இனவாதம் என்ற
    சொல்லிற்கு இடம் இல்லை அதனால்தான் இன்றும் முள்ளிவாய்க்காலில் உன்மையில் நடந்த
    இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் அது இனப்படுகொலை இல்லையேன்றும் ஆகாது. அதைமுதலில் விளங்கிக்கொள்ளவேண்டும்.

    அதேவேலை வடமாகாண முஸ்லிம்கள் இனசுத்திகரிப்பு செய்யப்பட்டு 27 வருடங்களின் பின்பு
    இப்போதாவது UN முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறியதை முஸ்லிம்கள் வரவேற்கின்றார்கள். அதை நீங்களும் ஏற்றுள்ளிர்கள் அதற்கும் உங்களுக்கும் நண்றி .

    ReplyDelete
  4. சேர் அந்தோனி என்ன மொட்டத்தலைக்கு முலங்காலுக்கும் முடிச்சு போடாதிர்கள் மூவினமும் விரட்டப்பட்டார்கள் என்று கூறுகின்றீர்கள் முஸ்லிம்கள் எப்படி விரட்டப்பட்டார்கள் என்று உங்களுக்குத்தெரியுமா தெரியாதா? 200/= ருபாவுடன் உடுத்திய
    உடையுடன் வெளியேறச் சொண்ணார்கள் அதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

    அதிலும் தமிழ் மக்களும் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்று கூறியுள்ளிர்கள் அப்படியாயின்விடுதலைப்புலிகள்
    தமிழ் மக்களுக்காக போராடினார்களா? அல்லது சர்வாதிகார யுத்தம் செய்தார்களா?

    சிங்கள மக்கள் 83-84-85 காலப்பகுதியிலேயே அவர்கள யுத்த காரணத்தால் வெளியேறினார்கள்.

    மொத்தத்தில் நீங்களும் இப்பதான் புலிகலை பயங்கரவாதிகள் என்று ஏற்றுக்கொள்ளும்
    நிலைக்கு வந்துள்ளிர்கள் காலம் கடந்து ஞானம் பிரந்துள்ளது (வாழ்த்துக்கள் )

    ReplyDelete

Powered by Blogger.