October 15, 2017

வடக்குகிழக்கு மாகாணங்களை சமஷ்டியின் கீழ், மதச் சார்பற்ற அலகாக உருவாக்க வேண்டும் - விக்னேஸ்வரன்

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நிராகரிக்கின்றீர்களா என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக இலங்கையின் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராஜ்ஜியம், கண்டிய இராஜ்ஜியம், உருகுணு இராஜ்ஜியம் மற்றும் கரையோர இராஜ்ஜியம் என்று பல இராஜ்ஜியங்களாக ஆளப்பட்டுவந்தது.

நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு சகல இராஜ்ஜியங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முழு இலங்கைக்கென ஒரு தனிநிர்வாக அலகை உண்டாக்கினார்கள்.

இதனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த மக்கள் முழு இலங்கையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டார்கள்

இப்பொழுதும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். முழு இலங்கையையும் சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர் இலங்கையரிடம் கையளித்துவிட்டுச் சென்றனர்.

சுதந்திரத்தின் போது இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை ஏற்றுக்கொண்ட எம் அரசியல் வாதிகள் அதிகாரம் கிடைத்த உடனேயே தாம் இலங்கையர் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டனர்.

சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், மலேயர் என தம்மைப் பிரித்துப்பார்க்கவும் சிந்திக்கவும் தொடங்கிவிட்டார்கள்.

பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டங்களைப் பெரும்பான்மையினருக்கு ஏற்ற விதத்திலும் சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் விதத்திலும் பாத்தனர்.

அதனால் 1949ம் ஆண்டில் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு கொண்டு வந்த 'சிங்களம் மட்டும்' சட்டம் தமிழ் அரச அலுவலர்களின் உரித்துக்களைப் பறித்தெடுத்தது.

தரப்படுத்தல் எம் மாணவர்களின் உயர் கல்வியில் கை வைத்தது. அரச காணிக்குடி யேற்றங்கள் தமிழர் பாரம் பரியமாக வாழ்ந்த இடங்களை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்த பெரும்பான்மையினர் பறித்தெடுத்து குடியிருக்க உதவின.

1970ம் ஆண்டளவில் தான் திருகோணமலையைச் சுற்றி சிங்களக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின. பொலிஸார் மேலான அதிகாரம் மத்தியின் கைவசம் இருந்ததால் வடகிழக்கு மாகாணங்களில் சிங்களப் பொலிஸாரின் ஆதிக்கம் கூடியது.

இராணுவத்தினரும் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது குறிப்பிட்ட சில பௌத்த வணக்கஸ்தலங்களை விட வேறெங்கும் பௌத்த கோயில்களோ, விகாரைகளோ இருக்கவில்லை.

இப்பொழுது இராணுவ அனுசரணையுடன் பௌத்த வணக்கஸ்தலங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வருகின்றன. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அவை எழும்புகின்றன.

போருக்குப் பின்னர் தான், இது ஒரு 'சிங்கள பௌத்த நாடு' என்ற குரல் ஆவேசமாக ஒலித்து வருகின்றது. சரித்திரம் பிழையாக எடுத்துரைக்கப்பட்டு இந்த நாடு ஒரு சிங்கள பௌத்தநாடு என்ற பொய்யான, பிழையான, தவறான கருத்தை முன்வைத்து வருகின்றார்கள்.

வடக்கில் எந்தக் காலத்திலுமே சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழவில்லை. தமிழ் பௌத்தர்கள் வடகிழக்கில் சிலநூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இன்று இருக்கும் பௌத்த எச்சங்கள் அவர்களால் விடப்பட்டவையே.

நாயன்மார்களின் பக்திப் பிரவாகம் மக்களை ஈர்க்கத் தொடங்கிய போது தமிழ் பௌத்தர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டு முன் போல் சைவர்கள் ஆனார்கள்.

ஆகவே வடகிழக்கு பௌத்தத்தை வேண்டாம் என்று கைவிட்ட ஒருபிரதேசம். அங்குமீளவும் பௌத்தத்தை அதுவும் அரச உதவியுடன் திணிக்கப் பார்ப்பது வடகிழக்கு மக்களின் மனிதஉரிமைகளைப் பாதிப்பதானது.

வடகிழக்கு மக்கள் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லாதவர்கள். இப்போதிருக்கும் பௌத்தர்கள் கூட அரச உள்ளீட்டால் அண்மைக் காலங்களில் உள்ளேற்கப்பட்டவர்கள்.

ஆகவே இலங்கையை பௌத்தநாடென்றோ சிங்களநாடென்றோ கூறுவதை நான் வலுவாக நிராகரிக்கின்றேன்.

இப்பொழுதும் எப்பொழுதும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளனர். தென்னிந்தியாவில் பௌத்தம் வளர்ச்சியடைந்த காலத்தில் இலங்கையின் வடகிழக்கிலும் பௌத்தம் வளர்ச்சி கண்டது.

அங்கு சைவம் தலைதூக்கியபோது இங்கும் சைவம் தலை தூக்கியது. பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வடகிழக்கை 'பௌத்தநாடு' என்றஅடைமொழியின் கீழ் கொண்டு வருவதைநான் கண்டிக்கின்றேன்.

மற்றைய ஏழு மாகாணங்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவற்றில் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கலாம். வடக்குகிழக்கு மாகாணங்களோ சமஷ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்படவேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

15 கருத்துரைகள்:

He is the best really and not a racist as some of mejority blame him as racist.

அதுதானே! அது என்ன பௌத்த நாடு?

எல்லா மக்களுக்குமுரிய நாடு.

இதனை பொதுமக்கள் அறிவதற்கு முன், படித்த மட்டங்கள் என்றும் அரசியல்வாதிகள் என்றும் சொல்லப்படுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை பௌத்தத்திற்கு மட்டுமுரியதல்ல.

விக்கி ஐயா நீங்க பெரிய ஆளு. ஆனாலும் பிரதேசவாதம் மதவாதம் இனவாதம் மொழிவாதம் என்பன தங்களது பேச்சில் ஊற்றெடுத்திருப்பதை காணலாம்.
காலனித்துவ ஆட்சியில் ஐரோப்பிய ஆட்சியாளர்களை அண்டிச்சசென்று சலுகைகளைப் பெற்று தங்கள் இனம் சார்ந்து நிறையச்சாதித்தீரகள். தப்பல்ல. ஆனால் சுதந்திர இலங்கையிலும் 50:50 கோரிக்கை நியாயமா ஐயா? பல்கலைக்கழக தரப்படுத்தல் முறையால் கிழக்குத் தமிழர்கள் நன்மை அடையவில்லையா? எனவே இது பிரதேச வாதம் இல்லையா?
வடகிழக்குக்கு மட்டும் மதச்சார்பற்ற நிலை என்பது முஸ்லிம்களின் மதக் கொள்கைக்கு வைக்கும் ஆப்பு இல்லையா?
நீங்க உங்கட பாதை. நாங்க எங்கட பாதை என்று வாழ்ந்துவிட்டும்போக வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் இருக்கட்டுமே.
ஐயா கூட்டமைப்பு உங்களைக்கழித்து ஶ்ரீபவனை அரவணைக்க பெருக்கல் வாய்ப்பாட்டை பிரயோகிப்பதை நீங்கள் உணராதலுமில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்.

Why parathiar told Sinhala Nadu. No body talk about that. All Bullsit world is changing we have to accomodate and live happy life. When Tamil go overseas look what they do only talk in their country only.

அவர்பெரிய ஆள் என்பது ஊருக்கே தெரியும் பாவம் அவர் அரசியலுக்கு வந்ததால் கண்ட அறிவிலிகள் எல்லாம் அவரை விமர்சிக்கிறார்கள்.(உங்களை கூறவில்லை😜).
வடகிழக்கை மதசார்பற்ற சமஷ்டீ ஆக்க அவர் கூறும் தர்க்கங்களூக்கு உமது இனவாதசிந்தனையில் பதில் இல்லை.
வடகிழக்கில் பௌத்தக்கொள்கை இருப்பதால் முஸ்லீம்களின் மதகொள்கைக்கு வராத ஆபத்து மதசார்பற்ற கொள்கையால் வரும் என்று எண்ணும் உமது மடமை நீர் அறிவிலீ என்பதை புடம் போட்டு காட்டுகிறது.
ஏனையமதத்தவர் 32%வாழும் இலங்கையை பௌத்த நாடு என்று கூறுவது எவ்வளவு தூரம் பிழை என்கிறோம்.
அப்படியிருக்கையில் ஏனைய மதத்தவர் 77% வாழும் வடகிழக்கை முஜ்லீம் சமஷ்டீ என்று கூற வேண்டுமென நினைக்கும் நீர் தான் உலகின் மிகப்பெரிய மதவாதி.
கிழக்கு தனித்திருந்தாலும் அங்கு 66%முஸ்லீம் அல்லாதோர் வாழ்வர் எனவே பெரிய நபர்கள் அறிவாற்றலுடன் பேசும் போது உம்மை போன்ற அரை வேக்காடுள் மூடுவது நல்லது.

யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் இன்றுள்ள கிழக்கு மாகாண பகுதி என்றுமே இருக்கவில்லை. அது கண்டி இராச்சியத்தின் கீழே இருந்தது.


ஆனால் தற்போது தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசம் என்ற போர்வையில் குறுக்கு வழியில் ஏன் தங்களது ஆட்சி எல்லையை அதிகரிக்க பார்கிறீர்கள்? ஒருவேளை வடக்கும் கிழக்கும் இணைந்தாலும் கூட முஸ்லிம்களை எவ்வாறு நடத்துவீர்கள் என்பதை சொல்லத் தேவையில்லை, தமிழர்களையும் ஜாதியின் பெயரால் இழிவாகவே நடாத்துவீர்கள்.

வடக்கை யாழ் இராச்சியமாக கருதி நீங்கள் ஆண்டு கொள்ளுங்கள். கிழக்கை சுதந்திரமாக விடுங்கள். மீண்டும் ஒரு அடிமை வாழ்க்கை தேவையில்லை. இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒரு நேர்மையான தமிழனே எங்களை ஆளட்டும்.

பிழையான கூற்று. வரலாற்றில் யாழ்ராச்சியத்தீன் கீழ் திருகோணமலை வன்னிமையும் இருந்தது .வரலாறு தெரியாமல் பிதற்ற க்கூடாது.


தற்போதைய வடமத்தி, கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தின் தென் பகுதிகள் வன்னிமைகள் ஆகும். அங்கு குறைவான அளவில் மக்கள் குடியேறினர். அவர்கள் வன்னியார் என்ற சிறு தலைமைகளின் கீழ் ஆளப்பட்டனர்.[36]

யாழ்ப்பாண தீபகற்பத்தின் தெற்கு, கிழக்கு திருக்கோணமலை மாவட்ட வன்னிமைகள் வரிக்குப் பதிலாக வருடாந்தத் திறையினை யாழ்ப்பாண அரசுக்கு வழங்கி வந்தனர்.[7][36] அத்திறை பணம், தானியங்கள், தேன், யானை, யானைத் தந்தம் ஆகியவாறு அமைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பாரிய தொலைவில் அமைந்திருந்ததால் வருடாந்த திறை முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.[36] 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப, மத்திய காலப்பகுதிகளில், தீவின் மேற்கு, தெற்கு, மத்திய பகுதி சிங்கள அரசுகளும் நிலமானியத்தின் கீழ் வந்தன

Dear அலி, எது எங்கே இருந்திருந்தால் என்ன? who cares?

எனிமேல், கிழக்கு கீழே வடக்கும், வடக்குக்கு கீழே கிழக்கும் இருக்கும்.

உங்களுக்கு தமிழோடு சேர உங்களது ஈகோ விடாது என்றால், கிழக்கில் உள்ள உங்களது 12% காணிகளை மொனராகளை மாவட்டத்துடன் இணைத்து போட்டு, ஞானசெர யுடன் டோம்&ஜெறி மாதிரி விளையாடி கொண்டு இருங்கோ.

Racist Vicky is always babbling like idiot.

Your days are numbered.

Mr Sri Bawan will run North better than you.

Ha ha who will give to you north and east dont dream.sinhalese will never ever allow this.they protected this land by sheding blood.and tamil terrorist will never ever get ealam.

What is racism can u define it??

Mr.Sharfraz khan
I think you should tell this to your leaders who dream for impossible muslim district. And southeast islamic repablic��������

North East merger is only a dream.

If so,then muslim district is an ultra dream,

Post a Comment