Header Ads



ரோஹிங்ய முஸ்லிம்கள் விவகாரம் - சம்பந்தன் வாய்திறந்தார்

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அடைக்கலம் தேடிவருபவர்களை விரட்டியடிப்பது சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட அராஜகச் செயற்பாடுகள் குறித்து ஊடகமொன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் சிலர், அகதிகளாக இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த நடவடிக்கை ஐ.நாவின் சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு முரணானது.

இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கி அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அரசின் கடமையாகும்.

இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அந்த மக்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் உதவ வேண்டும்.

நாட்டில் இந்த ஆட்சியிலும் இடையிடையே இனவாதச் செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் குழப்பியடிக்கும் இந்தச் செயற்பாடுகளுக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.