Header Ads



இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை? அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டார்களா?


இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும், சர்ச்சைக்குரிய வகையில் பதவி ஓய்வு பெற்றவருமான முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நேற்று முன்தினம் டிவிட்டரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக்கு குழு கொள்கைகளை விமர்சித்திருந்தார். அதில் அவர் தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை? அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்து டுவீட் செய்திருந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது:

இந்தியாவுக்காக விளையாடும் எல்லோருமே இந்தியர்கள்தான். அவர்களிடையே நீங்கள் ஜாதி மற்றும் நிறம் உள்ளிட்ட விஷயங்களையோ, அவர்கள் இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்துவரா அல்லது சீக்கியரா என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துடன் 20 ஓவர் போட்டித் தொடர் மற்றும் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ள இலங்கையுடனான டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியினை பிசிசிஐ கடந்த திங்களன்று அறிவித்தது.

இதில் நியூசிலாந்து தொடரில் ஐதராபாத்தினைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் 20 ஓவர் போட்டித் தொடரிலும், அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

முக்கியமாக சஞ்சீவின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஹர்பஜன் சிங்கே கூட தற்பொழுது இந்திய அணியில் விளையாடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

क्या इस समय भारतीय क्रिकेट टीम में कोई मुस्लिम खिलाड़ी है ?

आज़ादी से आज तक ऐसा कितनी बार हुआ कि भारत की क्रिकेट... https://t.co/Nb6ufi71qX

— Sanjiv Bhatt (IPS) (@sanjivbhatt) October 22, 2017
हिंदू मुस्लिम सिख ईसाई आपस में है भाई। क्रिकेट टीम में खेलने वाला हर खिलाड़ी हिंदुस्तानी है उसकी जात या रंग की बात नहीं होनी चाहिए (जय भारत) https://t.co/UVvSHaLJdY

— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 23, 2017

1 comment:

Powered by Blogger.