Header Ads



'லவ் டொபி' சாப்பிட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி - கல்கிஸ்ஸயில் சம்பவம்

கல்கிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள மகளீர் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரு மாணவிகள் இனிப்புக்களை உண்டதால் (டொஃபி) போதையேறி மயக்கமடைந்துள்ளனர்.

"லவ் ....." என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்ட இனிப்புக்களை பாடசாலைக்கு அருகில் உள்ள வர்த்த நிலையமொன்றில் பெற்றுக்கொண்ட மாணவிகள் அதனை வகுப்பறைக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளனர்.

இதன்போது , போதையுற்ற 8ம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவிகள் இருவரும் களுபோவில போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சமபவம் தொடர்பில் , கல்கிஸ்ஸ மகளீர் வித்தியாலயத்தின் உப அதிபர் கடந்த 25ம் திகதி காவற்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொணட காவற்துறையினர் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த இனிப்புக்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பவர்களை ரை எதிர்வரும் 19ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் இனிப்புக்களை (டொஃபி) பரிசோதனை செய்ய அரச சுவை பரிசோதனை பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.