Header Ads



புல்மோட்டையில் பேரினவாதிகளால், மீண்டும் காணி கொள்ளைக்கான முஸ்தீபு

புல்மோடடை பிரதேசத்திலுள்ள கண்ணீராவ,மாலனூர்,சமணக்குளம் போன்ற பகுதிகளில் பௌத்த விகாரைக்கென சுமார் 100 ஏக்கருக்குமேல் காணி அளவிட்டு கொடுப்பதாக பெறப்பட்ட தகவலை அடுத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் இன்று 10.10.2017 திகதி 1.28 மணியளவில் கிழக்கு மாகாண காணி ஆணையாளருடன் கொழும்பில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு இது தொடர்பாக வினவியபோது அவ்வாறான செயல்பாடு ஒன்று இல்லை குறித்த பகுதியின் பௌத்த பிக்கு பௌத்த விகாரை காணி தொடர்பான பகுதியை பார்ப்பதற்காகவே நாளை 11.10.2017 புல்மோட்டை 14ம் கட்டை மாலானோர் பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவித்தார்

அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டதாக அன்வர் தெரிவித்தார் 

மேலும் குறித்த பகுதிகள் அடங்கிய பகுதிகள் ஏலவே புனித பூமிக்கு அளவிட முற்பட்டபோது பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்களுடன் வீதியில்  இறங்கி எதிர்ப்பை காட்டி மக்களுக்கு சொந்தமான காணி என்பதை வெளிப்படுத்தி கடந்த மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக இன்னும் நீதிமன்றில் வழக்குகள் இடம்பெறுவதாகவும் அவை தொடர்பாக மிக அவதானமாக தாங்கள் செயல்படவேண்டும் எனவும் அன்வர் கேட்டுக்கொண்டார் 

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாவட்ட செயலாளர்,மாவட்ட பொலிஸ் ம அதிபர் ஆகியோருக்கு தெரிவித்ததாகவும் அன்வருக்கு தெரிவித்தார்

No comments

Powered by Blogger.