Header Ads



இதுதான் எங்களுக்கு இருக்கும் கவலை...!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழ்க்க முதல் கல்லை எறிந்த விமல் வீரவங்சவே தற்போதும் மகிந்தவை கஷ்டத்தில் தள்ளி வருவதாக பிரதியமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தெவிநுவர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பொருளாதார கொலையாளிகள் இருப்பதாகவும், தமக்கு வேலை செய்ய முடியவில்லை எனவும், சிலருக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுவதாகவும் விமல் வீரவங்சவே ஊடகங்கள் முன்னால் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

தற்போது மகிந்த ராஜபக்சவை சுற்றி இருந்து கொண்டு அவருக்காக வெறுமனே முதலை கண்ணீர் வடிக்கும் உதய கம்மன்பில என்ன செய்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாது போனால் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க போவதில்லை. அவருக்கு உதவவும் போவதில்லை எனக் கூறினார்.

விமல் வீரவங்சவும், உதய கம்மன்பிலவுமே மகிந்த ராஜபக்சவை சுற்றி இருந்து கொண்டு அவரது தோல்விக்கான முதல் துப்பாக்கி வேட்டை தீர்த்தனர்.

இதுதான் எங்களுக்கு இருக்கும் கவலை. தற்போது இவர்கள் மகிந்த ராஜபக்சவை காட்டி தமது வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் எனவும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.