Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அநீதி, பிரதேச செயலகம் முன் போராட்டம் (படங்கள்)


யாழ்ப்பாண மாவட்டத்தில்  மீள்குடியேறிய முஸ்லீம்   மக்கள்  அரசினால் வழங்கப்படும்  வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து   போராட்டம்  ஒன்றினை  யாழ் மாவட்ட  செயலக வாயிலில் நடாத்தினர்.

யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில்  இன்று(26) வியாழக்கிழமை   காலை 8  மணி முதல் 10  மணிவரை   இவ்வடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு   பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை  அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தே   இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதாவது மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்காக 2016 டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் இன்றுவரை அதில் ஒரு வீட்டையாவது குறித்த  மக்களுக்கு வழங்கவில்லை எனவும்  2017ம் வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில் 20க்கும் குறைவானவர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

எனவே தான்  இந்த அநீதிக்கு எதிராக நாம் குரல்கொடுப்பதாகவும்  எமது தாய் மண்ணிலிருந்து வெளியேற்றும் அராஜகத்தை சில  அரச  அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

எனவே தான் எமது கோரிக்கை   மக்களுக்காக வழங்கப்பட்ட 200 வீடுகளும்  முழுமையாக வழங்கப்படல் வேண்டும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமாதானமான முறையில்  உயர் அதிகாரிகளுடன் பேசினோம் ஆனால் எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே எமது நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கு இந்த  அமைதியான அடையாள சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டோம் என கூறினர்.

-பாறுக் ஷிஹான்-



2 comments:

  1. இரு இனத்தவருளுக்கும், இனவிகிதாசார முறைப்படி, வீடுகள் பகிர்ந்தளிக்க படல் வேண்டும்.

    இலங்கையில் வீடுகள், காணிகள் இல்லாதவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  2. இந்த அரச இயந்திரங்கள் எல்லாம் இனவாத தமிழ் அதிகாரிகள் தான் முதல் இவர்களுக்கு உபதேசம் செய்து விட்டு வடகிழக்கு இணைப்பு மற்றும் விடயங்கள் தமிழ் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்,.

    ReplyDelete

Powered by Blogger.