Header Ads



"சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளை, கட்டுப்படுத்த மஹிந்த தவறினார்"


மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமைக்கு இனவாதமே காரணம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“பாதுகாப்புச் செயலராக இருந்த தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்சவையும்,  சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளையும் மகிந்த ராஜபக்ச கட்டுப்படுத்த தவறி விட்டார்.

அதனால், சிறுபான்மையினர் அந்நியப்பட்டு, அவருக்கு எதிராக அதிபர் தேர்தலில் வாக்களித்தனர்.

மகிந்த ராஜபக்ச ஒரு பருவகால அரசியல்வாதியாக இருந்தாலும், சிங்கள பௌத்த வாக்குகளுடன் மாத்திரம் மூன்றாவது தடவையும் ஆட்சியைப்பிடித்து விடலாம் என்று தவறாக எடைபோட்டிருந்தார். உணர்வுகள் அவரது பலத்தைக் குறைத்து விட்டது.

பசில் ராஜபக்ச மாத்திரமே, சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருந்தார். ஆனால்  கோத்தாபய ராஜபக்சவின் கருத்துக்களையே மகிந்த ராஜபக்ச செவிமடுத்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.