Header Ads



இலங்கை கண்டுபிடிப்பாளர், அப்ராத் அஹ்ஸனுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள்


இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு. கண்டுபிடிப்பாளர் என்பதற்கு தகுதியையும்,  அந்தஸ்தையும் பெற்றவர்களை கௌரவிக்கும் முகமாக. அடையாள அட்டையை [ இலங்கை கண்டுபிடிப்பாளர் என்ற அரச அந்தஸ்து ]   வழங்க கடந்த வருட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான தினத்தில் தீர்மானித்தது. அந்த வகையில் இந்த  அடையாள அட்டை கல்முனை ஸாஹிரா மாணவன் " ஜீ .எம்.  அப்ராத் அஹ்ஸன் " என்ற மாணவனுக்கு 

இந்த வருடம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற  ( ஓக்டோபர் 26 )  இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான தினத்தில்  விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்த  இந் நிகழ்வில் கலந்து கொண்டார் இலங்கை புத்தாக்குனர்  ஆணையாளர் ஸ்ரீ. மஹேஸ் எதிரிசிங்க அவர்கள் இம் மாணவனுக்கு அடையாள அட்டையினை  வழங்கி வைத்தார்.

இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு பின்வரும் சலுகைகளை இந்த  அடையாள அட்டைக்கு வழங்கி  உள்ளது  

1.  அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
2. mydeal.lk இல் பொருட்களை கொள்வனவு செய்ய விலைக்கழிவு
3.  இலவச அரச போக்குவரத்து வசதிகள்
4. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி போட்டிகளில் பங்குகொள்வதற்கான வசதிகள்
5.  கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள்
4. Airtel Sim மூலம்  இலவசமாக அழைப்புகளை ( call) மேற்கொள்ளல்
5. Lanka hospital  இல் சிகிச்சை பெற விஷேட சலுகை
6. Softlogic 10% விலைக்கழிவு
7. DINAPALA group 10% விலைக்கழிவு
8. Masters hardware 5 - 25 % விலைக்கழிவு
9. Mahanama paint 30% விலைக்கழிவு
10. Hameedia 10 % விலைக்கழிவு
11. Great well 10 % விலைக்கழிவு
12. Chinese Dragon 10 % விலைக்கழிவு
13. Brown's batteries 25 % விலைக்கழிவு
14. Auto mirag 10 % விலைக்கழிவு
15. Titus stores 10 % விலைக்கழிவு
என பல  சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இம் மாணவன் இதற்கு  முன்னர் இலங்கை புலன் உரிமைச் சொத்து நிறுவனத்தினால் தனது  கண்டுபிடிப்புக்கு  தேசிய  ஆக்கவுரிமை பத்திரத்தை  பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
(தகவல் :- புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை )
3 AttachmentsView allDownload all

3 comments:

Powered by Blogger.