Header Ads



ஏமாற்றம் கொடுத்த, நேற்றைய பாராளுமன்ற அமர்வு


இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மிகக் குறைந்தளவிலான உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு அமர்வு நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சபா நாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இதில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றினார்.

புதிய அரசியலமைப்பின் மூலம், நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த சிறப்பு அமர்வில் இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட ஐந்து சார்க் நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

விருந்தினர்களால் நாடாளுமன்றம் நிறைந்திருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த அமர்வில் பங்கேற்கவில்லை.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையாக காட்சியளித்தன. குறிப்பாக பின்வரிசை ஆசனங்களில் பெரும்பாலும் வெறுமையாகவே இருந்தன.

2 comments:

  1. Reason for the absence of the right thinking parliamentarians is that they may have the feeling of law makers are not needed as the law is taken on the road and abused. Good example is that Galkissa - Rohingiyas incident.

    ReplyDelete
  2. வாசி இல்லாத அமர்வாக இருக்கலாம். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெட்கக்கேடு!

    ReplyDelete

Powered by Blogger.