Header Ads



பாரியளவு வீதிக்கு வந்த, தனியார் வாகனங்கள் - பஸ்கள் நிரம்பி வழிகிறது

ரயில்வே ஊழியர்களின் பணி புறக்கணிப்பால் கொழும்பு நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் நேற்றிரவு முதல் திடீரென ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பேருந்துகளில் மக்கள் குவிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் தனியார் வாகனங்களின் பாரியளவு எண்ணிக்கை இன்றைய தினம் வீதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

காலி வீதி, இரத்தமலானை பிரதேசம் மற்றும் யூனியன் பிளேஸ் பகுதிக்கு அருகில் முழுமையாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ரயில் போராட்டம் காரணமாக தினசரி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு சிரமமாக உள்ளதென பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.