Header Ads



அமெரிக்க விமானந் தாங்கி, போர்க்கப்பலுக்கு இலங்கையில் என்ன வேலை..?


அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான நாசகாரி தாக்குதல் கப்பல்களின் அணி நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

இந்த தாக்குதல் அணியில் விமானந்தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ், அதிவேகப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிரின்சிரோன், நாசகாரிக் கப்பல்களான,  யுஎஸ்எஸ் ஹவார்ட், யுஎஸ்எஸ் சூப், யுஎஸ்எஸ் பின்க்னி, யுஎஸ்எஸ் கிட் ஆகியனவே நாளை கொழும்பு வரவுள்ளன.

எதிர்வரும் 31ஆம் நாள் வரை இந்த போர்க்கப்பல்கள் கொழும்பில் தரித்து நிற்கும் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அண்மையில் இருதரப்பு கப்பல் தயார் நிலை ஒத்துழைப்பு பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்கா – அமெரிக்க கடற்படைகளுக்கிடையிலான உறவுகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பு வரவுள்ளன.

1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்கப் போர்க்கப்பல்களின் அணி கொழும்புக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் மூலம், சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு 1.54 பில்லியன் ரூபா மேலதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல்களுக்கான விநியோக கொள்வனவு, ஆயிரக்கணக்கான அமெரிக்க மாலுமிகள் சிறிலங்காவின் தரைக்கு வருவதன் உள்ளூர் வர்த்தகத்துக்கு உதவியாக இருக்கும்.

இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா கடற்படையினருடனும் உள்ளளூர் மக்களுடனும் இணைந்து அமெரிக்க மாலுமிகள் செயற்படவுள்ளனர்.

333 மீற்றர் நீளம் கொண்ட யுஎஸ்எஸ் நிமிட்ஸ், 23 தளங்களைக் கொண்டது. இதில் 5000 மாலுமிகள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரிக்கும் வசதிகளும் உள்ளன.



5 comments:

  1. Good.
    அமெரிக்கா வெகு விரைவில் இலங்கையில் ஒரு ராணுவ தளம் அமைக்கும்.

    ஒலுவில் துரைமுகத்தை அமேரிக்காவுக்கு கொடுப்பது சிறந்தது. அதை அவர்கள் தங்கள் செலவில் பெரிதாக உருவாக்கி, பயன்படுத்தி கொள்வார்கள். இலங்கைக்கும் பாதுகாப்பு.

    ReplyDelete
  2. Nothing special anything they just visit in Sri lanka like others.

    ReplyDelete
  3. இலங்கையில் 2009ல் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து புலிகளுக்கான ஆயுத விநியோகம் முற்றாக இழக்கப்பட்டதுடன் இலங்கை அரசுக்கான பங்களிப்பும் குறைவடைந்து. இதனை மாற்றியமைத்து தனது ஆயுத விற்பனை வருமானத்தை அதிகரிக்க வேண்டும். தான் இப்பிராந்தியத்தில் அடிக்கடி ஊடுருவி பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டும். இதற்கு புலிகளின் எச்சங்களை பயன்படுத்த திட்டங்கள் இருக்கும்.

    ReplyDelete
  4. Why Olivia? Why no kaangasen Thurs port?... This will help your future task forcseparation..

    Let Sri Lanka be one country.. But justice and rights for all ..

    ReplyDelete
  5. Oluvil, Trinco, Ambanthottai ports (east/south) ports are near to international sea ways. So they will take these ports, not ports in north/west of SL.

    Also, Olivil is very small & undeveloped port. USA will develop it on their own expense.

    USA's permanent presence in SL will be good for SL

    ReplyDelete

Powered by Blogger.