Header Ads



புர்காவை தடை, செய்ய வேண்டுமா? சுவிஸில் பொது வாக்கெடுப்பு


சுவிஸில் முகத்தை மறைத்து கொள்ளும் பர்தா, முகமூடியை தடை விதிப்பது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்தா, முகமூடி போன்ற பொருட்கள் மீதான தடை பொதுவாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

சுவிஸில், மக்களே ஒரு பொது விடயம் குறித்த முடிவை எடுக்கும் நேரடி ஜனநாயக முறை அமுலில் உள்ளது.

இந்த முறையின் கீழ் பல வழக்கறிஞர்கள் 100,000 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை பொதுவாக்கெடுப்பு பெட்டியில் போட்டு இதை செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.

இதற்கான திகதியை பெடரல் கவுன்சில் அறிவிக்கவுள்ள நிலையில், அடுத்த வருடமே பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே சுவிட்சர்லாந்தின் இத்தாலிய மொழி பேசும் மக்கள் வாழும் Ticino பகுதியில் இதுபோன்ற தடை சட்டம் கடந்தாண்டு இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.