Header Ads



உடனடியாக தேர்தலை நடத்து, இல்லையேல் சட்ட நடவடிக்கை - மிரட்டும் முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர்

உள்ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை போன்று மாகாண சபை தேர்­த­லையும் காலம் கடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. எனவே அர­சி­யல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்ள உச்ச அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு ஒரு வாரத்­திற்குள் மாகாண சபை தேர்தல் குறித்து அறி­விக்­கா­விடின் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா தெரி­வித்தார். தேசிய ஒற்­று­மைக்­கான சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் ஊடக சந்­திப்பு நேற்று தேசிய நூல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,

இலங்­கையில் 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டது. நல்­லாட்சி என்று சொல்­லப்­ப­டு­கின்ற கூட்­ட­ர­சாங்கம் ஆட்­சியை கைப்­பற்­றி­யது. நல்­லாட்சி என்­பதன் பொருள் என்ன ? ஜன­நா­யகம் மற்றும் சட்ட ஒழுங்­கு­களை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தா­கவே நல்­லாட்சி அமை­யப்­பெற வேண்டும். ஆனால் இந்த நாட்டில் அவ்­வா­றா­ன­தொரு ஆட்சி காணப்­ப­டு­கின்­றதா ? பொது மக்­களின் எதிர்­பார்ப்­புகள் அபி­லா­ஷைகள்  நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­னவா ? இவ்­வாறு பல­த­ரப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு விடை­ய­ளிக்க முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. 

அர­சி­ய­ல­மைப்பு என்­பது நாட்டின் மூலச்­சட்டம். அதனை மீறி செயற்­ப­டு­வ­தற்­கான அதி­கா­ரங்கள் யாருக்கும் வழங்­கப்­பட வில்லை. அதே­போன்று அர­சி­ய­ல­மைப்பை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் வகை­யி­லான அதி­கா­ரங்கள் இலங்­கையில் யாருக்கும் இல்லை.  மக்கள் குடி­ய­ரசு என்­பதன் பொருள் மக்­களை மிஞ்­சிய அதி­காரம் யாருக்கும் கிடை­யது என்­பதே ஆகும். 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பதவி பிர­மாணம் செய்யும் போது புனித பைபி­ளையும் அர­சி­ய­ல­மைப்பின் மீதும் கைகளை வைப்பார். அந்­த­ளவு அர­சி­ய­ல­மைப்பு அதி­கா­ர­மா­னது. மக்­களால் நாட்டை ஆட்சி செய்ய முடி­யாது என்­ப­தா­லேயே மக்­க­ளினால் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர். எமது அர­சி­ய­ல­மைப்பும் அவ்­வா­ற­ன­தொன்­றே­யாகும். அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட நிலை எமது அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்­றன. 

நிறை­வேற்று அதி­காரம் , சட்­ட­வாக்க அதி­காரம் மற்றும் நீதித்­துறை அதி­காரம் என பல்­வேறு பிரி­வு­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்­டுள்­ளன.  அர­சி­ய­ல­மைப்பில் புதிய விட­யங்­களை உள்­ள­டக்கும் போது தேவை­யான வியாக்­கி­யா­னங்­களை உயர் நீதி­மன்றம் வழங்கும். இதற்கு அமை­வாக உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பிலும் பல்­வேறு அதி­கார நிலைகள் அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்­றஒ. மாந­கர சபை , நகர சபை மற்றும் பிர­தேச சபை என பல்­வேறு வகையில் அதி­கார மட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. 

இவற்றின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து தான் 1988 ஆம் ஆண்டில் பிரே­ம­தா­ச­வினால் அர­சி­ய­ல­மைப்பின் 25 ஆவது பிரிவு முன்­மொ­ழி­யப்­பட்­டது. அதா­வது உள்­ளு­ராட்­சி­மன்­றங்­களின் ஆட்சி காலம் முடி­வ­டை­வ­தற்கு ஆறு மாத காலத்­திற்கு முன்பு தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கைகள் நிறை­வ­டைந்­தி­ருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு இரண்டு வரு­டங்கள் ஆகிய நிலை­யிலும் உள்­ளு­ராட்­சி­மன்ற ஆயுட் காலம் நிறை­வ­டைந்து 2 வரு­ட­க­மா­கியும் தேர்தல் குறித்து எவ்­வி­த­மான அறி­விப்­பு­களும் இல்லை. இது அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரான செயற்­பா­டாகும். 

இதனால் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள் அதிகம். அதே போன்று தற்­போது மாகாண சபை தொடர்­பான தேர்தல் குறித்தும் இழு­பறி நிலை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் தெளி­வா­கவே 5 வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­கான சட்ட  தன்மை 13 அர­சி­ய­ல­மைப்பின் 154 (இ) பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

கிழக்கு , சப்­ர­க­முவ மற்றும் வட­மத்­திய ஆகிய மாகா­ணங்­களின் ஆயுட் காலம் முடி­வ­டைந்­துள்ள நிலையில் ஓரு வார காலத்­திற்குள் தேர்தல் திக­தியை தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­விக்க வேண்டும். இதற்­கான அதி­காரம் அர­சி­ய­ல­மைப்பின் 78 பிரிவில் வழங்­கப்­பட்­டுள்­ளது. தேர்தல் சட்­டத்தில் இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  அர­சி­ய­ல­மைப்பின் 104 ஆவது பிரிவில் சுயா­தீன தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு இதற்­கான வலு­வான அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் தற்­போ­தைய சூழலை பார்க்கும் போது அவ்­வா­றா­ன­தொரு அறி­விப்பு வருமா என்று தென்­பட வில்லை. காலம் கடத்தும் செயற்­பா­டு­க­ளையே அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்­றது. அதற்கு ஒத்­தி­சை­வ­துப்­போன்று  சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவும் செயற்­ப­டு­கின்­றது. எனவே இதனை நல்­லாட்சி என்று அர்த்­தப்­ப­டுத்த முடி­யாது. அதற்கான பொது மக்களுகான உரிமைகள் பறிக்கப்படும் போது அதனை வேடிக்கை பார்க்கவும் முடியாது. 

உள்ளுராட்சிமன்றங்கள் செயலிழந்துள்ள மாகாண சபைகளும் அதே நிலைமையில் காணப்பட்டால் நிலைமை மோசமாகி விடும் . அதற்கு அனுமதிக்க முடியாது. எனவே ஓரு வார காலத்திற்குள் மாகாண சபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கா விடின் அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவின் பிரகாரம் பொது மக்களுக்கு உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்ய முடியும். இதற்கான நெறிப்படுத்தல்களை நாங்கள் முன்னெடுப்போம்  என்றார். 

1 comment:

  1. முன்னாள் நீதியரசரின் கருத்துக்களை நாம் பொதுமக்கள் என்ற வகையில் எமது பரிபூரண ஆதரவைத்
    தெரிவிக்கின்றோம். சட்டத்தைச் துச்சமாக மதிக்கும் அரசு அதன் சட்டவிரோதச் செயலை உடனடியாகக் கைவிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த நடவடிக்ைக எடுக்க வேண்டுமெனக் கேட்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.