Header Ads



இலங்கையில் எண்ணெய், எரிவாயு அகழ்வில் பங்கேற்குமா கட்டார்...?


மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.

பிரதான எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான கட்டார், சிறிலங்காவில்  எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதற்கமைய சக்தி ஒத்துழைப்பு தொடர்பான உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படவுள்ளது.

இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையிலும், இராஜதந்திர பயிற்சி மற்றும் ஆய்வு தொடர்பான ஒத்துழைப்புக்கான உடன்பாடும் ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.