Header Ads



"வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் நடைமுறையில் சாத்தியமான பிரேரணை எவரிடம் இருந்தும் வருவதில்லை"

நடைமுறையில் இருக்கும் அரசியல் அமைப்பின் 13வது திருத்த சட்டத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எவ்வளவுதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் வடக்கை பிரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இனவாத ரீதியில் நாடு பிரிபடுவதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கொண்டு வரப்படும் வரையிலும் நாடு பிரிபடுவதற்கான ஆபத்து காணப்பட்டது.

வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் நடைமுறையில் சாத்தியமான பிரேரணை எவரிடம் இருந்தும் வருவதில்லை. நாங்கள் எந்தவொரு சந்தரப்பத்திலும் விடுதலைப் புலிகளுக்கு இசைந்து சென்றவர்கள் கிடையாது.

தேர்தலுக்காக விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் கொடுத்தவர்கள் கிடையாது. நான் பிரதிநிதித்துவம் படுத்தும் கட்சியான ஜே.வி.பி நாட்டை பாதுகாக்க முன்னின்ற ஒரு கட்சியாகும்.

புதிய அரசியல் அமைப்பு பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன வலியுறுத்தியுள்ளார்.


இதனை ஜனாதிபதியோ, பிரதமரோ, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவோ கூறவில்லை. இதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். சிங்கள மக்களின் இணக்கத்துடனேயே புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

அவரின் இந்த கருத்தில் நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இருப்பதை காணமுடிகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தீர்வொன்று எட்டப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் இருக்கத்தக்கதாகவே அத்தீர்வு அமைய வேண்டும்.
    இந்தியாவின் வல்லுறவினால் தப்பிதமாகப் பெற்றெடுத்த அன்றைய இணைந்த வடகிழக்கு மாகாணசபை மூவினத்திற்கும் பாதகமானது என்பதும் குறைமாத்த்தில் பிறந்து காலாவதியானது என்பதும் வரலாறாகும்.

    ReplyDelete

Powered by Blogger.