Header Ads



தெற்கு நெடுஞ்சாலையில் லொறி சரிந்து, பெருந்தொகை பன்றி இறைச்சி வீதியில் சிதறியது


தெற்கு அதி­வேக நெடுஞ்­சா­லையின் 34 ஆவது கிலோ­மீற்றர் பிர­தே­சத்தில், பன்றி இறைச்­சியை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மற்­றொரு லொறி­யினால் மோதப்­பட்டு சரிந்­ததில் மூவர் காய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் விபத்­துக்­குள்­ளான லொறி­யி­லி­ருந்து வீழ்ந்த இறைச்சி பாகங்கள் வீதியில் சில மீற்றர் தூரத்­துக்கு சிதறிக் காணப்­பட்­டன.


இரு லொறி­களின் சார­தி­களும், உத­வி­யாளர் ஒரு­வ­ருமே காய­ம­டைந்த நிலையில் காலி கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கொழும்­பி­லி­ருந்து மாத்­தறை கடு­வன நோக்கி பன்றி இறைச்­சி­களை ஏற்றிச் சென்ற சிறிய லொறி­யொன்று மீன்கள் ஏற்­றி­வ­ரு­வ­தற்­காக வெலி­கம, மிரிஸ்ஸ நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த லொறியை மோதுண்­டதில் இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வி­பத்­தினால் காலி நோக்­கிய அதி­வேக நெடுஞ்­சா­லையின் ஓர் ஒழுங்கை சில மணி­நே­ரங்­க­ளுக்கு மூடப்­பட்­டி­ருந்­த­தாக அதி­வேக நெடுஞ்­சாலை பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

சம்­ப­வத்தில் இரு லொறி­க­ளுக்கும் அதி­வேக நெடுஞ்­சா­லையின் பாது­காப்பு வேலிக்கும் பலத்த சேதம் ஏற்­பட்­டுள்ள அதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சாரதி உதவியாளரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ரெ.கிறஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.