Header Ads



யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா, இஸ்ரேல் - துணிச்சலான அறம் சார்ந்த முடிவு என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு


ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேறியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாகக் கூறி அமெரிக்கா தமது முடிவை அறிவித்தது. அதையடுத்து இஸ்ரேலும் விலகுவதாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று வருணித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதன்யாகு.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது. எனினும் அமெரிக்கா செலுத்தவேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்ததும் தங்களுக்கு சுமையாக இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

3 comments:

  1. அமெரிக்கா சாக்கடையையும் இஸ்ரேல் பாசிஷநாட்டையும் பற்றி இதுவரை விளங்காதவர்கள் அவ்விரண்டும் உலக மக்களை நாசப்படுத்தி அவ்களின் அனியாயமான இன்பத்திற்கேட்ப உடன்பட வைக்கும் முயற்சியை பாருங்கள்.

    ReplyDelete
  2. Two headed vicious venomous twin snakes of so called vibrant democracies .

    Who controlls JEWYORK sorry Newyork .

    ReplyDelete
  3. இந்த இரண்டு சொறி நாய்களும் விலகியமயால் UNESCO தூய்மை அடைந்துவிட்டது

    ReplyDelete

Powered by Blogger.