Header Ads



முஸ்லிம்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தருவோம் - சம்பந்தன்


முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான விசேட சந்திப் பொன்று நேற்று (19.10.2017) நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும்(NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில்(TNA) இடம்பெற்றது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடை பெற்ற இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அது தொடர்பான காணிப்பங்கீடு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதில், நல்லாட்சிக்கான் தேசிய முன்னணி சார்பாக அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் அவர்களும் அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான, முஹம்மட் ஹனான் ஆகியோருடன் முல்லைத்தீவு மக்கள் சார்பாக அஸ்செய்க் சப்ரின் மற்றும் மௌலவி றிபாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், சிறீதரன், சார்ள்ஸ் நிர்மல நாதன் மற்றும் வியாளேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

கடந்த வட மாகாண சபைத் தேர்தலின் போது TNA உடன் NFGG செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வட மாகாண மக்களின் மீள் குடியேற்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் வட மாகாண மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களை TNA உடன் NFGG தொடர்ச்சியாக பேசிவருகிறது. அந்த வகையில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பாக TNA உடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் NFGG ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மற்றுமொரு முக்கிய சந்திப்பாகவே நேற்றைய சந்திப்பு  இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த NFGG பிரதிநிதிகளும் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள் என்பவற்றை தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துக் கூறினர்.

அங்கு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தரவே முயற்சிக்கிறது என உறுதியளித்ததோடு இரண்டு சமூகத்தவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் தீர்வுகளைக் காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் , இம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு TNA முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அதற்கான அறிக்கையொன்றை தயாரித்து அதனடிப்படையில் தீர்வுகளைக் காண முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

5 comments:

  1. Unmaiyana muslimaga erunthal evanugalai ennum nampuvingala vetgama ellaiya?????????

    ReplyDelete
  2. வடக்கு முஸ்லிம்களின் நலன்களுக்கு உருவாக்கப்பட்ட nfgg பிரதிநிதித்துவத்தை விலை கொடுத்து வாங்கிய இந்த சம்பந்தனும் இந்த சுமந்திரனும். இவர்களிடம் இன்னமும் முஸ்லிம்களின் நலன்களை எதிர்பார்ப்பவர்கள் அரசியல் ஏமாளியாகவே கருதப்படுவார்கள் .சம்பந்தனும் சுமந்திரனும் முஸ்லிம்களுடன் சந்திப்புக்களை ஏட்படுத்தக்கூடிய நோக்கம் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவு கேட்பதட்காகவே அமைகின்றது .

    ReplyDelete
  3. தருவயள் ஆனா.........
    பெடியல் விடாவினம்.

    ReplyDelete
  4. Still thousands of Tamils need to be resettled in Trinco and Ampara, so why don't you care about that

    ReplyDelete
    Replies
    1. அந்த புள்ளிவிவரங்களை GA இடம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

      Delete

Powered by Blogger.