Header Ads



இலங்கை அணியுடன், பாகிஸ்தான் செல்லும் அமைச்சர்


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லாஹூரில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் தானும் கலந்து கொள்ளப் போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என சர்வதேச கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தம்மால் காவற்துறை மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நாட்டு பிரதி காவற்துறை மா அதிபர் ஒருவர் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி இந்நாட்டில் இடம்பெற்ற போட்டிகளில் பங்கு பெற இலங்கை வந்ததாகவும் , யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. நீண்ட வருடங்களாக இலங்கைக்கும் பாகிஸ்தானிற்கும் இருக்கும் நீண்ட நல்லுறவை குலைக்க இந்திய ரோ ஹிந்துதுவ தீவிரவாதிகளின் ஒரு சதி தான் இந்த இலங்கை அணி மீதான தாக்குதலும்

    ReplyDelete
    Replies
    1. @Gtx, இந்த தாக்குதலை செய்தது Lashkar-e-Jhangvi எனும் சுன்னி முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு என பாக்கிஸதான் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்து, case யையும் முடித்து விட்டது.

      உங்கள் வீட்டு toilet க்குள் இருந்து கொண்டு உங்கள் இனவாத மூலையை பாவித்து, புதுசா துப்பறிந்து இதை கண்டுபிடித்தீர்களாக்கும்.

      Delete
    2. ஊத்தையும் நாற்றமும் நிறைந்த சாக்கடையை மட்டுமே கிளறும் பண்டியின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்களின் தளங்களில் நுழைந்து முஸ்லிம்களை தாக்கி எழுதும் அந்தோனி இனவாத மூளைக்கோளாறுக்குட்டமை நிதர்சனமானது.

      Delete
  2. Pakistanis know who is lttes and their humanitarian our ppl don't know who are the terrorists

    ReplyDelete

Powered by Blogger.