Header Ads



9 வயது சிறுவனுக்கு, மனைவி வேண்டுமாம்...!


இங்கிலாந்தில் 9 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால், தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி தான் வேண்டும் என தெரிவித்துள்ளான்.

Essex பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த Jack Joe என்ற சிறுவனுக்கு, தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

இது அவனுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டான்.

தனியாக கிச்சன், படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறான்.

ஆனால், சிறுவயது என்பதால் இன்னும் 8 வருடத்துக்கு என்னால் வாகனம் ஓட்ட முடியாது என வருத்ததுடன் கூறுகிறான்.

Channel 5's Gypsy Kids என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இச்சிறுவன், தற்போது எனக்கு 10 வயதாகவிருக்கிறது. எனக்கு தேவையானவை அனைத்தும் என்னிடம் இருக்கிறது.

பைக் இருந்தும் என்னால் ஓட்டமுடியவில்லை, ஆனால் 3 சக்கர வாகனம் அனுமதி என்தால் அதனை ஓட்டுகிறேன். இனிமேல் எனக்கு தேவையான பணத்தினை நானே சம்பாதித்துக்கொள்வேன், என் பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டேன்.

முழுமையாக வளர்ந்துவிட்ட ஒரு ஆளாகவே என்னை எனது பெற்றோர் பார்க்கின்றனர். தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் என கூறியுள்ளான்.

1 comment:

  1. ஒரு சமுகத்தினது வாழ்க்கைப்பாணியில் சமயமும் அரசியலும் பிரதான பங்கினை கொண்டுள்ளன. அந்தவகையில் இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள சமயம்சாரா அரசியல் கொள்கையின் தோல்வி நிலையையே இது காட்டுகின்றது.
    இன்னும் சிறிது காலத்தில் இத்தகைய கொள்கையைக்கொண்ட அமெரிக்கா இந்தியா போன்றனவும் கலாசார சீரழிவுக்குட்பட்டு மானிட பிறழ்வு நிலையை அடையலாம்.

    ReplyDelete

Powered by Blogger.