Header Ads



மக்காவுக்கு வருவோர் 30 மில்லியன் - புதிய 115 கட்டடங்களையும், 70.000 ஹோட்டல் அறைகளையும் நிறுவ திட்டம்


புனித மக்கா பெரிய பள்ளிவாசல் யாத்திரிகர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சவூதி அரேபியா புதிதாக இரு முதலீட்டு நிறுவனங்களை அமைத்துள்ளது.

புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த முதலீட்டு நிறுவனங்கள் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

புனித தலங்களுக்கு வரும் முஸ்லிம் யாத்திரிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த நிறுவனங்கள் அங்கு 150,000 ஹோட்டல் அறைகளை புதிதாக அமைக்கவுள்ளது.

2030 ஆம் ஆண்டாகும்போது மக்காவுக்கு வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை 30 மில்லியனை எட்டும் என்றும் மதீனா 23 மில்லியன் யாத்திரிகர்களுக்கு இட வசதி வழங்கும் என்றும் சவூதி பொது முதலீட்டு நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக மக்கா பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் 854,000 சதுர மீற்றர்கள் பகுதியில் 115 கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் 70,000 புதிய ஹோட்டல் அறைகள் மற்றும் 9,000 வீட்டு தொகுதிகள் அடங்கும்.

No comments

Powered by Blogger.