Header Ads



பாராளுமன்றத்தின் மீது 100 குண்டுகளை வீசவேண்டும் - கெஹலிய

பாராளுமன்றின் மீது நூறு குண்டுகள் வீசப்பட வேண்டுமென முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் அதிகாரங்களை குறைத்து பெயரளவு பாராளுமன்றமாக உருவாக்கி மாகாணசபைகளுக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டால் ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவிலேயே இலங்கை மிகவும் முக்கியமான நாடாக காணப்படுகின்றது எனவும் இதனால் அனைவரும் இலங்கை குறித்து அவதானித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

65, 000 கிலோ மீற்றரைக் கொண்ட இந்த சிறிய நாட்டின் வளங்கள் பற்றி எம்மை விடவும் அமெரிக்காவிற்குத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த நாட்டை ஒன்பது துண்டுகளாக பிளவடையச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள், நேரடியாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இவ்வாறு நாடு பிளவடைந்திருக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார் இதன் காரணமாகவே  பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்திலும் வடக்கு மட்டும் போதாது கிழக்கும் தேவை எனக் கோரப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் நாட்டை துண்டாடுவதே நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். முதுகெலும்பு அற்ற தலைவர்களைக் கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்ய முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. இவருடய மகன்தான் கிரிகட் சுற்றுப்போட்டிக்காக இங்கிலாந்து செண்றசமயம், உள்ளூர் சேவை விமாநமொண்றில் பயணித்தபோது மப்பு ஓவராகி விமான கதவை திறக்க முயற்சித்து ஏனயவர்களால் தடுக்கப்பட்டார்.

    ReplyDelete
    Replies
    1. @Ramy, இவரும் மகனுக்கு சலைத்தவர் இல்லை.

      ஒஸ்ரேலியாவுக்கு போன போது, அங்கு மப்பு ஓவராகி hotel balcony யில் இருந்து குதித்து, தனது காலை முறித்து கொண்டவர்.

      Delete
    2. சரிதான் 100 குண்டுகளை வீசினால் பாராளுமண்ற ஏரியாவே அழிந்துவிடும் என்பதை யோசித்தாரோ என்னமோ! விமலுக்கு நிலநடுக்கம் வேண்டுமாம்...

      Delete
    3. @ Ajan Antonyraj : நீர்; உம்முஸ்லீம்களுக்கு எதிராகவே கருத்திடும் எண்ணத்தை சற்று தளர்த்தி ; இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்பதை பற்றி இணையத்தில் அலசிப்பாருமேன்.(மதம்மாற்ற முயற்ச்சித்தோ, கிண்டலடிப்பதோ எனது எண்ணமில்லை, எதற்கெடுத்தாலும் முஸ்லீம்கள் இப்படி செய்கிறார்கள் அப்படி உள்ளார்கள் என்று குறைகூறுவதைவிட அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்பதை சும்மாவேனும் இணையத்தில் தேடிப்பார்க்கலாமே? ஏனெனில் 'முஸ்லீம்களிலேயே இஸ்லாத்தை நன்கு விளங்கியவர்களும் உள்ளனர், குறைவாக விளங்கியவர்களும் உள்ளனர்') அழகான முறையில் பதிலளிக்கவும்???

      Delete
    4. @Ramy, இன்னொரு மதம் பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லை, நல்ல விடயம் தான்.
      நான் ஒருபோதும் "இஸ்லாம் மதம்" பற்றி comments செய்வதில்லை.

      Delete

Powered by Blogger.