Header Ads



முஸ்லிம் முதலமைச்சர் இனி முடியாதபடி, வரலாற்று துரோகம் அரங்கேற்றம் - நாமல்

முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, இனி கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வரவே முடியாத ஒரு சட்ட திருத்தத்துக்கு ஆதரவளித்து வரலாற்று துரோகத்தை அரங்கேற்றியுள்ளதாக ஹம்மாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நேற்று 20.09.2017ம் திகதி புதன் கிழமையை இலங்கை வாழ் முஸ்லிம்கள் தங்களது நாட்குறிப்பு புத்தகங்களில் கரி நாளாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.நேற்று இவ்வரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தமானது வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே காணப்படுகின்ற முஸ்லிம் மக்களுக்கே அதிக பாதிப்பானது என்றே என்னுடன் கலந்துரையாடிய பல முஸ்லிம்கள் கூறினர்.நான் இதன் பின்னால் மறைந்துள்ள ஆபத்துக்களை விளக்கிய போது என்னோடு கதைத்த முஸ்லிம்கள் தலைமீது கை வைத்து சிந்தித்தார்கள்.

இது கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களைப் போலவே கிழக்கு மக்களுக்கும் அதிக ஆபத்தனாது. இத் தேர்தல் முறமையினூடாக கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் படியான ஏற்பாடுகள் செய்யப்படும்.கிழக்கில் தமிழர் தரப்பு ஆட்சியமைக்க முஸ்லிம்கள் ஆதரவு தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்படவுள்ளது. இது உருவானால் முஸ்லிம்கள்,தங்களது முதலமைச்சர் கனவை கைவிட வேண்டியது தான். தமிழ் அரசியல் தலமைகளின் பின்னால் செல்ல வேண்டிய நிலையெ ஏற்படும்.

பின்கதவால் கொண்டுவரப்பட்ட  இந்த சட்டமூலத்தை நாங்கள் எதிர்த்தோம். எங்களோடு முஸ்லிம் தரப்பு இணைந்திருந்தாலோ அல்லது குறைந்தது நடுநிலமை பேணி இருந்தாலோ, இந்த வரலாற்று துரோகத்தை முஸ்லிம்களால் வெற்றிகொள்ள முடிந்திருக்கும்.நாங்கள் உங்களை, எங்களோடு பூரணமாக இணைந்து அரசியல் முன்னெடுக்க கூறவில்லை.உங்கள் நலன் பாதிக்கப்படக் கூடிய இவ்விடயத்தில் ஒன்றிணைந்திருக்கலாம்.இதனை எதிர்த்த முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்ததன் மர்மம் புரியவில்லை.இதனை எதிர்த்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் யார் என்பதை, உங்கள் உள்ளத்தை தொட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

எமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கெதிரான ஓரிரு சம்பவங்கள் அரங்கேறியதை மறுக்கவில்லை.அதனை வைத்தே இன்றைய முஸ்லிம் அரசியல் வாதிகள் எம்மை இகழ்ந்தார்கள்.முஸ்லிம்களுக்கு பாதிப்பான பாரிய அநீதியை நிகழ்திவிட்டு,நாம் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ததாக கூறுவார்களாக இருந்தால், அதற்கு முஸ்லிம் மக்களே தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. ஆடு மழையில் நலைந்ததென்று ஓநாய் அழுதது போல் உள்ளது இவரின் செய்தி. அன்று இவர்களுடைய ஆட்சிக்காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இன்றைய நல்லாட்சி என்ற பெயரில் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.அன்றே இந்த BBS போன்ற தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருக்குமாயின் இன்று இவ்வளவு மோசமான நிலை இந்நாட்டில் ஏற்பட்டிருக்காது. மறுபுறம் உண்மையான, நேர்மையான முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களிடம் இல்லை. எல்லோரும் முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள், காரணம் முஸ்லிம் மக்கள் இன்னும் உறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் விழிக்கும் வரை இந்நிலை தொடர்ந்து கொண்டே செல்லும். (குற்றம்)

    ReplyDelete
  2. 20th Amendment Draft document – Constitution:
    (Note: The biggest danger to the Eastern Province to remain "FREE" as a single Eastern Province Council is the clause proposed below).
    2.1 Inter-Provincial Co-operation It is also recommended that the Constitution provide for the possibility of interprovincial co-operation with regard to matters falling within the executive competence of such provinces.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. இனி எமது பிரதேசங்களுக்குள் எந்த அந்நியனும் நூழைந்து நாட்டாமை செய்ய மாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.