Header Ads



ஆங்சான் சூகிக்கு எதிராக தீர்மானம், அமெரிக்காவில் முரண்பாடு

அமெரிக்க செனட் சபையில் மியான்மார் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பேன் என குடியரசு கட்சியை சேர்ந்த மிட்ச் மெக்கொன்னல் தெரிவித்துள்ளார்.

மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வங்காளதேசத்திற்கும், இந்தியாவிற்கும் தப்பியோடி வருகின்றனர். இதற்கு பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மாரின் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த விவகாரத்தில் ஆங் சான் சூகி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க செனட் சபையில் கடந்த வாரம் குடியரசு கட்சியை சேர்ந்த ஜான் மெக்கைனும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ரிச்சர்ட் டர்பினும் தீர்மான கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆங் சான் சூகியை எதிர்த்து அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாலம் என கூறப்படுகிறது.

அவ்வாறு ஆங் சான் சூகிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பேன் என குடியரசு கட்சியை சேர்ந்த மிட்ச் மெக்கொன்னல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'ஆங் சான் சூகிக்கு எதிராக தீர்மானம் வந்தால் அதற்கு ஆதரவளிக்கமாட்டேன். மியான்மாரில் இராணுவ ஆட்சி ஒழிந்து ஜனநாயக ஆட்சி மலரே இருக்கும் ஒரே வழி அவர்தான்', என கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.