Header Ads



கொழும்பில் ரோஹின்யர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் - கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேணை

இலங்கைக்கு அகதி அந்தஸ்து கோரி இலங்கை நுழைந்த ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக சில இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிக பிழையான நடவடிக்கைகளுக்கு முற்று முழுதால் நாம் எதிர்ப்பதாக இனவாத்தினை தூண்டுவதற்கு சில இனவாதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 86வது சபை அமர்வு இன்று (28) தவிசாளர் சந்திராச கலபதி தலைமையில் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை ஆகியோரினால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

நல்லாட்சி அரசினை உருவாக்க பலர் பட்ட கஷ்டங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க சில இனவாதிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள கூடியதாக அல்ல. இவ்வாறு தொடந்தும் இந்நாட்டில் சில பெளத்த துரவிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன்வாத செயற்பாடுகளுக்கு இலங்கையின் பொலிஸ் அதிகாரிகள் தூண்டுதலாக உள்ளார்களோ என சந்தேசகம் எழுகின்றது.

இலங்கைக்கு அகதிகளாக வருகை தந்த ரோஹிங்கிய முஸ்லிம்களை பாதுகாத்து அவர்களுக்கு இலங்கையில் தங்க வைப்பதற்கான அந்தஸ்து வழங்கப்பட்டு அவர்களை கொழும்பு, கல்கிசை பகுதியில் தங்குவதற்காக இடம் ஒன்றில் அமர்த்தப்பட்ட போது சில காடையர் குழு அங்கு சென்று அம்மக்களை விரட்டியடிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது..? அத்துடன் இவ்வாறு மிகவும் பிழையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். குறிப்பாக பர்மாவில் நடைபெறும் படுகொலையில் தப்பிக்கொண்டு வந்தவர்களுக்கு இவ்வாறு மனிதாபிமான முறை அற்ற வகையில் செயற்படுவது நினைத்தும் எமது நாட்டின் நிலை தொடர்பில் சிந்தித்து கவலையடைகின்றதுடன். மிகவும் தண்டனை அதிகம் வழங்கும் கூசா எனும் சிறைச்சாலையில் இவர்களை வைத்துள்ளது மிகவும் கவலையடைகின்றது. முழு முஸ்லிம் சமூகம் மாத்திரம் இன்றி முழு இலங்கையர்களும் இவ்விடயம் தொடர்பில் அதிகம் கவலையடைகின்றது. 

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரமர், உரிய அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் அத்துடன் இது தொடர்பில் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் பேசியும் உள்ளார்.அத்துடன் அமைச்சர்களான மங்கள சமரவீர  மற்றும் ராஜித சேனாரதன உள்ளிட்டோர் இன ஒற்றுமை தொடர்பில் கரிசனை செலுத்தி பேசி சரியான தலைமைத்துவம் என நிரூபித்துள்ளார்கள்.   ஆகவே இவ்விடயத்தை அரசு கனத்திற்கொண்டு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மக்களுக்கு புகலிடம் வழங்கி வைக்க வேண்டும் எனவும் அதற்கு மூவின மக்களுக்கு உதவ் முன்வர வேணும் எனவும் அங்கு அமைச்சர் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் மியன்மார் தூதரகத்திற்கும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கண்ட பிரேரணை அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் அறிவித்தார்.

-சப்னி அஹமட்- 

    

No comments

Powered by Blogger.