Header Ads



ரோஹிங்யா முஸ்லிம்கள் திரும்பி வராதபடி, பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடி புதைப்பு


ரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் திரும்பி வர முடியாத வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் கண்ணிவெடிகளை மியன்மார் இராணுவம் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவத்தினருக்கும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் கடந்த இரண்டு வாரங்களாக உச்சமடைந்துள்ளது.

இதில் 400க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பங்களாதேஷில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், தமது நாட்டிற்கு வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை மீளவும் மியன்மாருக்கு திருப்பியனுப்புவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனினும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் நாட்டிற்கு வருவதை தடுக்கும் வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் அந்நாட்டு இராணுவம் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:


  1. ஒரு முஸ்லீம் நாடு சரி முன் வந்து பர்மா முஸ்லிம்களை அநியாயம் செய்யாதே அப்படி செய்தால் சும்மா சரி அடிப்பேன் புடிப்பேன் என்று சொன்னதா இல்லை.ஒவ்வொரு முஸ்லீம் நாடுகளிலும் அந்த இந்த என்று நாவின ஆயுதம் வைத்து இருக்கின்றார்கள் ஆனால் சும்மா எல்லாமே கண்துடைப்பு தான்.


    சவூதி அராபிய என்ற ஒரு நாடு இருக்கின்றன அவர்களிடே வாயிலே புட்டு அடஞ்சி அவர்களுக்கு தெரியும் கத்தாரோடே சும்மா பிரச்சினை ஏட்படுத்த மட்டும் தான்.

    ReplyDelete

Powered by Blogger.