Header Ads



ஹஜ், சவுதிக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு..?

சவுதியின் வருவாயை தெரிந்துக் கொள்வதற்கு முன்னதாக, ஹஜ் புனிதப் பயணத்திற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் அங்கு செல்லும் மக்களின் மொத்த எண்ணிக்கையை பார்ப்போம்.

கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 83 லட்சம் மக்கள் சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் சென்றார்கள். இவர்களில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான அல்-உம்ராவுக்கும் சென்றார்கள்.

கடந்த தசாப்தத்தில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 25 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

உம்ரா

ஹஜ் யாத்திரை குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், உம்ரா ஆண்டு முழுவதும் மேற்கொள்ளக்கூடியது. கடந்த ஆண்டு எட்டு லட்சம் பேர் உம்ரா யாத்திரை மேற்கொண்டனர்.

சவுதிக்கு செல்லும் இஸ்லாமியர்களில் 80 சதவிகிதம் பேர் உம்ரா செல்கின்றனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உம்ரா செல்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்த்து.

இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக உயர்ந்துவிடும் என்று செளதி அரேபியா நம்புகிறது.


ஹஜ்ஜினால் சவுதி அரேபியாவுக்கு எவ்வளவு வருமானம்?

ஹஜ் பயணத்தினால் கடந்த ஆண்டு மட்டும் சவுதிக்கு 12 மில்லியன் டாலர், அதாவது 76 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் நேரடி வருவாய் கிடைத்தது.

சவுதி அரேபியாவுக்கு சென்ற 80,330,000 யாத்ரீகர்கள் அங்கு செய்த மொத்த செலவு 23 மில்லியன் டாலர்கள். இந்தத் தொகை அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிக்கிறது.

இது அந்த நாட்டு மொத்த வருவாயில் முதன்மையானது இல்லையென்றாலும், சவுதியின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சராசரியாக 4600 டாலர்கள் அதாவது மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்வதாக மக்கா சேம்பர் மற்றும் வணிக அமைப்பின் கணிப்பு தெரிவிக்கிறது. ஹஜ் பயணத்திற்கு உள்நாட்டினருக்கு ஆகும் செலவு 1500 அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் ஒரு லட்சம் ரூபாய்.

ஹஜ் யாத்திரைக்கான செலவு நாட்டுக்கு நாடு மாறுபடும். இரானிலிருந்து ஹஜ் யாத்திரை செல்ல சராசரி செலவு சுமார் 3000 அமெரிக்க டாலர்கள்.

பயணக்கட்டணம், உணவு, மற்றும் பிற செலவுகளும் இதில் அடக்கம். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கும் ஏறக்குறைய இந்த அளவு செலவுதான் ஆகும்.

தன்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசியின் பாரசீக பிரிவிடம் இரானை சேர்ந்த ஒரு ஹஜ் பயணி சொல்கிறார், "இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான எனது பட்ஜெட் 8000 அமெரிக்க டாலர்கள்".

இதில் அவருடைய சொந்த செலவுகளும் அடங்கும் என்றும் அவர் கூறுகிறார். எது எப்படியிருந்தாலும், செலவழிக்கப்படும் பணம் அனைத்தும் செளதி அரேபியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வளப்படுத்துகிறது.


எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் மக்கா செல்கின்றார்கள்?

ஹஜ் யாத்திரைக்கான கோட்டா இந்தோனேஷியாவிற்கு பிற நாடுகளைவிட மிகவும் அதிகம். ஆண்டுக்கு 2,20,000 பேர் செளதிக்குக் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஹஜ் புனித பயணத்திற்கான கோட்டாவில் இது 14 சதவிகிதமாகும்.

மொத்த ஹஜ் பயணிகளில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு தலா 11 சதவிகித ஒதுக்கீடும், பங்களாதேஷுக்கு 8 சதவிகிதமும் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பிறகு நைஜீரியா, இரான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளும் ஹஜ் யாத்திரைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கச்சா எண்ணெய் விற்பனையில் கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிட்டால், செளதிக்கு ஹஜ் யாத்திரையில் கிடைக்கும் வருமானம் குறைவே.

ஆனால் எண்ணெய் வருமானத்திற்கு சமமாக ஹஜ் யாத்திரை வருமானத்தையும் அதிகரிக்கவேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவேண்டும் என்ற OPEC (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) அமைப்பின் முடிவினால், இந்த ஆண்டு செளதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம் என்ற அளவிற்கு குறையும் என சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பீடு செய்துள்ளது.

மற்ற ஆதாரங்களில் இருந்து ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முயலும் செளதி அரேபியாவுக்கு, மத சுற்றுலாக்களில் இருந்து கிடைக்கும் வருவாயும் முக்கியமானது.

- BBC - Tamil

2 comments:

  1. 12 millions dollars
    12×1000000 = 12000000
    12000000 × 152 = 1824000000
    இது இலங்கை நாணய கணக்கு

    12000000 × 64 =76,8000000
    இது இந்திய நாணய கணக்கு
    so 76 கோடி 80 இலட்சம்

    ReplyDelete
  2. 120,00000 × 64 = 76,8000000

    76 கோடி 8000000 இலட்சம்

    என்னங்க sir உங்கள் கணக்கு. ....?

    ReplyDelete

Powered by Blogger.