September 29, 2017

முஸ்லிம்களுக்கு எதி­ரான பிக்­கு­களுக்கு பொலி­சா­ரி­னதும், அர­சாங்­கத்­தி­னதும் மறைமுக ஆத­ர­வு?

இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான பௌத்த பிக்­கு­களின் நட­வ­டிக்கை பொலி­சா­ரி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் மறைமுக ஆத­ர­வுடன் தொடர்ந்து செல்­வது தமக்கு கவ­லை­ய­ளிப்­ப­தாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பிர­த­ம­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

கல்­கி­சையில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு எதி­ராக விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்­தல்கள் மற்றும் தாக்­குதல் முயற்­சிகள் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்­காவின் தலைவர் என்.எம்.அமீன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு நேற்று முன்­தினம் அனுப்பி வைத்­துள்ள அவ­சரக் கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கல்­கி­ஸையில் ஐக்­கிய நாடுகள் சபை அக­திகள் உயர் ஸ்தானிகரால­யத்தின் அனு­ச­ர­ணையில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த ரோஹிங்­கிய அக­திகள் மீது கடும்­போக்கு பௌத்த பிக்­குகள் மற்றும் பௌத்த அமைப்­புகள் மேற்­கொண்ட தாக்­கு­த­லா­னது இந்த நாட்டில் சட்­டமும் ஒழுங்கும் உங்கள் அரசின் கீழும் இல்­லாத நிலை­யையே காண்பிக்கிறது.

பௌத்த தீவி­ர­வா­தி­களால் முஸ்லீம் சமு­தா­யத்­திற்கு எதி­ரான பிரசாரம் பொலிஸ் மற்றும் உங்கள் அர­சாங்­கத்தின் மறை­முக ஆத­ர­வுடன் தொடர்­கி­றது. கடந்த மஹிந்த ராஜ­பக்ஷ நிர்­வா­கத்தின் தீவி­ர­வாத பௌத்த குழுக்­க­ளுக்கு வழங்கப்பட்ட ஆதரவு கார­ண­மாக, இந்த நாட்டில் முஸ்­லிம்­களின் பெரும்­பான்­மையினர் 2015 இல் ஒரு மாற்­றத்­திற்கு வாக்­க­ளித்­தனர். இன்னும், பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய மற்றும் ரா­வண பலகாய ஆகி­யோரால் எங்கள் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வெறுப்பு நடவடிக்கை மூத்த பொலிஸ் அதி­கா­ரி­களின் முன்­னி­லையில் தொடர்­கி­றது. 

சட்­டத்தின் ஆட்­சியை நிறு­வு­வ­தற்­கான அழைப்­பு­களை உங்கள் அர­சாங்கம் கவ­னிக்­காது காவ­லா­ளி­க­ளிலும் அவர்­க­ளு­டைய ஆத­ர­வா­ளர்­க­ளி­டத்­திலும் சட்­டத்தை அமுல்­ப­டுத்த பொலிஸ் மற்றும் நீதித்­துறை என்பன தயக்கம் காட்­டு­கின்­றன. 

பொலிஸ் மா அதி­ப­ருக்கு செய்­யப்­படும் புகார்­களை பொலிஸ் மா அதிபர் சட்­டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, ஜனா­தி­பதி மற்றும் நீங்­களும் புறக்­க­ணித்து வரு­கி­றீர்கள். 

சிங்­கள தேசிய முன்­னணி பதா­கையின் கீழ், புதிய இனக்­கு­ழுக்கள் - டான் பிரி­யசத், அமித் வீர­சிங்க, ரஞ்­ச­ன­ கணே சரத்ன ஹிமி, சலியா மற்றும் அமித் வண­சிங்க ஆகி­யோ­ருடன் இன­வாத அமைப்­புக்கள் இணைந்­துள்­ளன. பலர் வெறுப்பு மற்றும் வன்­மு­றை­களைத் தூண்­டி­விடும் குற்­றச்­சாட்­டுக்­களில் பல்­வேறு நீதி­மன்­றங்­களின் சட்ட விதி­மு­றை­களை மீறு­கின்­றனர். ஐ.சி.ஆர்.சி.பியின்கீழ் எந்­த­வொரு குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­ப­ட­வில்லை, அதே சமயம், கண்டி, தந்­து­றையில் 19 வய­தான முஸ்லிம் சிறுவன் தனது இன்ஸ்­டா­கிரேம் பக்­கத்தில் புத்­த­ம­தத்­திற்கு எதி­ராக ஒரு படத்தை வெளி­யி­ட்டமைக்கா மூன்று மாதங்­க­ளுக்கு மேலாக தடுத்­து­வைக்­கப்­பட்டே விடு­விக்­கப்­பட்டார்.

இரத்­ம­லா­னையில் ஐ.நா அக­திகள் நிலை­யத்தின் ன் கீழ் உள்ள 32 அக­தி­க­ளுக்கு எதி­ராக 26ஆம் திகதி கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்­குதல் மற்றும் வன்­முறை இந்த அக­தி­களை கைது செய்யுமாறு பொலிஸாரை கட்­டா­யப்­ப­டுத்­தியமை  குறித்த நபர்களுக்கு தண்­ட­னையை வழங்­கு­வ­தற்­கான ஆதாரம் ஆகும். இந்த அக­தி­களில் 17 குழந்­தைகள் மற்றும் ஏழு பெண்கள் மற்றும் ஏழு ஆண்கள் அடங்குவர். இவர்­களில் பெரும்­பா­லானோர் 5 வய­திற்குக் கீழா­ன­வர்கள்.

சிங்­கள தேசிய முன்­ன­ணியின் பதா­கையின் கீழ் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தலை­மை­யி­லான இந்த தாக்­கு­தலின்போது அகதிகள் மியான்­ம­ருக்கு உட­ன­டி­யாக நாடு கடத்­தப்­பட வேண்டும் என்று கோரினர். 

இந்த கும்பல் அனை­வ­ரையும் கொல்­லு­மாறு அச்­சு­றுத்­தி­ய­துடன், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு கல­கத்­தையும் ஆரம்­பித்­தது.  மூத்த பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் ஊட­கங்­களின் முன்­னி­லையில் இந்த அச்­சு­றுத்தல் செய்யப்பட்டது. இந்த அச்சுறுத்தல்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் கிடைக்கின்றன.  வன்முறைக் கும்பலின் இந்த வெறுப்புணர்வுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது பொலிசார் தோல்வியடைந்தனர். எனினும் எந்தவொரு வன்முறையாளரும் இதன்போது கைது செய்யப்பட வில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

5 கருத்துரைகள்:

Allah is sufficient for everything. we as Muslims in sri Lanka fails to change our life style to Islamic way starts from our business earnings and other activities, we will headin to disasters in a few years time. we have to be united. talk one ward. leave all these groups for the moments. you can be thowheed. thableeq. thareeka. or what ever its . we all believe in Allah and prophet. pl sake hands and move forward to shaw unit as Muslims are one in sri Lanka. then inshaAllah Allah will descend peace to muslim in sri Lanka

I agree with you Mr
Jifry very sooner we have to become a unity under kalima. ﻻاله اﻵ الله

The Muslim Council of Sri Lanka should NOT distract the Muslim community from their political aspirations of finding an answer to the violence and the hate crimes that had taken place in Aluthgama, Beruwela, Dambulla, Dehiwela, Kandy, Polonnaruwa and Balangoda and the “CONSTITUTIONAL REFORMS ISSUE” which is more important at present. Social media had exposed the “TREACHERY” done by the 21 Muslim parliamentarians and Muslim political party and party leaders in parliament recently. IS THE MUSLIM COUNCIL OF SRI LANKA (just an ad hock) UNREGISTERED (let them prove their registration) trying to draw a ”RED HERRING” to the above vital issues by bringing forth the “ROHINGYA REFUGEE” issue?
The MCSL should give priority to call attention to formulate a memorandum to be presented to the Minister of Muslim Cultural Affairs REQUESTING the Minister to SUBMIT a CABINET PAPER REQUESTING PARLIAMENT TO AUTHORIZE SRI LANKA MUSLIMS TO HAVE THE RIGHT TO CONSTRUCT THEIR PLACES OF WORSHIP ADHERING TO THE CIVIL AND ADMINISTRATIVE LAWS AND REGULATIONS OF SRI LANKA AS SPECIFIED WITHIN THE CONSTITUTION. The Muslim Council of Sri Lanka should also call for the “promised Hate Speech Bill” to be enacted soon. If there are NO such laws in the present Constitution, then, under the proposed Constitutional Reforms, such laws have to be enacted/written under the “SECTION OF RIGHTS as “RELIGIOUS RIGHTS”. What is needed to EVEN achieve OUR vision, Insha Allaha, it is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. The Muslim Council of Sri Lanka should also be PROACTIVE in this endeavor if they are honestly concerned about the welfare of the Muslim community and its political future, Insha Allah.

Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Strategy at this point is to practice diplomacy since the bankrupt politicians using these communual issuses to bank the innocent Buddhists are very few and we always should remember that majority of Srilankans are peace loving. We are not showing the real Ahlaq towards our brothers be it of any religion.. for example, see how we behave on the roads while driving

Post a Comment