Header Ads



யார் இந்த, ஹலீமா யாகூப்

-விடிவெள்ளி-

சிங்­கப்பூர் நாட்டின் எட்­டா­வது ஜனா­தி­ப­தி­யா­கவும் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யா­கவும் ஹலீமா யாக்கூப் தேர்தல் எது­வு­மின்றி நேர­டி­யாகத் தேர்வு செய்­யப்­பட்­டுள்ளார். சிங்­கப்­பூரின் புதிய ஜனா­தி­ப­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்ள ஹலீமா கடந்த வியாழக்கிழமை ஜனா­தி­ப­தி­யாக சத்­தியப் பிர­மாணம் செய்து கொண்டார். 

தான் தேர்தல் இன்றி ஜனா­தி­ப­தி­யாக தேர்வு செய்­யப்­பட்­டமை, சிங்­கப்பூர் நாட்டின் அபி­வி­ருத்­திக்குப் பங்­க­ளிக்கும் வகையில் காத்­தி­ர­மாக செய­லாற்­று­வ­தற்கு எவ்­வித தடை­யா­கவும் இருக்கப் போவ­தில்லை எனவும், மலாய் சமூ­கத்­திற்­கான ஒதுக்­கீட்டின் அடிப்­ப­டையில் தான் ஜனா­தி­ப­தி­யாக முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தாலும் இன, மத பேத­மின்றி நாட்டு மக்கள் அனை­வரின் நல­னுக்­கா­கவும் சேவை­யாற்­ற­வுள்­ள­தா­கவும் அவர் நேற்று முன்­தினம் மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் தெரி­வித்­துள்ளார். 

சிங்­கப்­பூரின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்ட மூவரில், மலாய் சமூ­கத்­துக்­கென வழங்­கப்­பட்­டி­ருந்த ஒதுக்­கீட்டின் அடிப்­ப­டையில் ஹலீமா மாத்­தி­ரமே உரிய தகுதி நிலையை அடைந்­தி­ருந்­த­மையால்  நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். 

சிங்­கப்­பூரின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்து வந்த டொனி டொன் கெங்­யாமின் பத­விக்­காலம் கடந்த மாதம் 31 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்­ததை தொடர்ந்து  அடுத்த ஜனா­தி­ப­தி­யாக மலாய் இனத்தைச் சார்ந்­த­வர்கள் மாத்­தி­ரமே போட்­டி­யி­டலாம் என மேல­திக கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற முன்னாள் சபா­நா­ய­கரும் ஆளும் மக்கள் செயற்­பாட்டு கட்­சியின் உறுப்­பி­ன­ரு­மான 63 வய­து­டைய ஹலீமா யாக்கூப் உட்­பட ஐவர் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக விண்­ணப்­பித்­தனர். இவர்­களில் மூவரின் விண்­ணப்­பங்கள் ஏற்­கப்­பட்­டன. எனினும் அவர்­களில் இரு­வரின் வேட்பு மனுக்கள் உரிய தகுதி நிலையை அடை­யாத கார­ணத்­தினால் தகுதி நீக்கம் செய்­யப்­பட்­டனர். 

இதை தொடர்ந்து மலாய் இனத்தைச் சார்ந்த  ஹலீமா யாக்கூப் தேர்­தலை சந்­திக்­கா­ம­லேயே சிங்­கப்­பூரின் புதிய ஜனா­தி­ப­தி­யாக அறி­விக்­கப்­பட்டு நேற்று  ஜனா­தி­ப­தி­யாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்டார். 

பல்­வேறு எதிர்ப்­புக்கள், தடை­க­ளுக்கு மத்­தியில் வெற்­றி­க­ர­மாக செயற்­பட்டு சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தின் முதல் பெண் சபா­நா­ய­க­ராக ஹலீமா 2013 இல் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்தார்.  

யார் இந்த ஹலீமா?

ஐந்து பிள்­ளை­களை கொண்ட மிகவும் வறிய குடும்­ப­மொன்றில் ஹலீமா இறு­தி­யாக பிறந்தார். ஹலீ­மா­வுக்கு 8 வய­தா­கும்­போது காவ­லா­ளி­யாக பணி­யாற்றி வந்த தந்தை இறந்­ததும் அன்று தொடக்கம் ஹலீ­மாவின் தாயாரே உண­வகம் ஒன்றில் உத­வி­யா­ள­ராகப் பணி­பு­ரிந்து குடும்பப் பொறுப்பை தலைமேற் சுமந்து கொண்டார். 

பாட­சாலை நேரம் தவிர்ந்து மிகுதி நேரத்தில் தாயா­ருக்கு உத­வி­யாக அதே உண­வ­கத்தில்  மேசை துடைத்தும், பாத்­திரம் கழு­வியும் வந்­த­தாக தனது சுய­ச­ரி­தையில் ஹலீமா குறிப்­பி­டு­கின்றார்.  வறு­மை­யுடன் போரா­டு­வது மிக கடினம். எனினும் அதையும் தாண்டி வெற்­றியை சுவைக்க வேண்டும் எனும் வெறியை அது உரு­வாக்கி விடும் என்­கிறார். 

தாயா­ருடன் உண­வ­கத்தில் வேலை பார்த்து வந்­த­மையால் அதிக நாட்கள் அவரால் பாடசாலைக்கு சமு­க­மளிக்க முடி­யாமல் போனது. இதன் கார­ணத்­தினால் 2 ஆம் வகுப்பு பயின்று கொண்­டி­ருந்த ஹலீமா சிங்­கப்­பூர், -­சீனா பெண்கள் பாட­சா­லையில் இருந்து விலக்­கப்­பட்டார். 

பின்னர் தஞ்சொங் கடோங் பெண்கள் பாட­சா­லையில் சேர்ந்து கல்­வியில் ஊக்கம் காட்­டிய ஹலீமா சிங்­கப்பூர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உயர்­கல்­வியைத் தொடர்ந்தார்.  சட்­டத்­து­றையில் இள­மாணி பட்டம் பெற்றார்.

1978 இல் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரசில் இணைந்து மூன்று தசாப்­தங்­க­ளாக பல்­வேறு வகி­பா­கங்­களை வகித்து வந்த ஹலீமா 2001 இல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தேர்வு செய்­யப்­பட்டார்.  2011 இல் இளைஞர், விளை­யாட்டு, சமூக அபி­வி­ருத்தி அமைச்சுப் பதவி ஹலீ­மா­வுக்கு வழங்­கப்­பட்­டது. 

சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தின் முதல் பெண் சபா­நா­ய­க­ராக ஹலீமா 2013 இல் தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் ஒழுங்கமைப்பில் அங்கம் வகிக்கும் ஹலீமா பெண்களின் உரிமை மற்றும் வயோதிபர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் காத்திரமான முன்னெடுப் புக்களை மேற்கொண்டுள்ளார். 

ஹலீமா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ஹிஜாப் அணிவதை வழக்கமாகக் கொண்ட முஸ்லிம் பெண் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

No comments

Powered by Blogger.