Header Ads



ஞானசாரர் ஜப்பான் செல்ல, நான் அனுமதி வழங்கவில்லை - மஹிந்த

ஞானசார தேரர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கிண்டலாக  குறிப்பிட்டார்.

கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் எரக்கமனைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் குழு தங்காலை கார்ல்டன் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தது.

இதன்போது அங்கு சில முஸ்லிம் பிரமுகர்களிடம் நட்பு ரீதியாக உரையாடும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தான் ஒருபோதும் ஞானசார தேரரை பாதுகாக்கவில்லை எனவும் அவரை தன்னுடைய அரசில் பாதுகாத்தவர்கள் இந்த அரசாங்கத்தில் பலம் பொருந்தியவர்களாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும்  நான்கு பொலிஸ் குழுக்கள் தேடப்பட்ட ஞானசார தேரருக்கு தான் பிணை வழங்க பணிக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கிண்டலாக  குறிப்பிட்டார்.

1 comment:

  1. அதென்றால் உண்மைதான்.
    ஆனால் அப்போது நீதிமன்ற தலைமையகம் அலரி மாலிகையில் தானே இருந்தது சாரே.

    ReplyDelete

Powered by Blogger.