Header Ads



நியுசிலாந்தில் ரோஹின்ய, ஆதரவு போராட்டம் - இலங்கையர்களும் பங்கேற்பு (படங்கள்)


(நியுசிலாந்திலிருந்து M J M Saldhan)

பர்மாவில் இன அழிப்புக்கு உள்ளாகும் "ரொஹிங்கியா" மக்க‌ளுக்கு ஆதரவாகவும், இன அழிப்பை உடனடியாக நிறுத்துமாரு பர்மிய ஆன் சாங் சுகி அரசை வலியுறுத்தியும் "ரொஹிங்கியா மக்களுக்கான நியூசிலாந்து அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நியூசிலாந்து ஓக்லாந்து நகரில், அட்டோயா திறந்த வெளி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பல மனித உரிமை அமைப்புக்களும், பல்லின மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை ரொஹிங்கிய மக்களுக்காக தெரிவித்துக்கொண்டார்கள். இன அழிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கான விசேட துஆ பிராத்தனை போராட்டத்தின் இறுதியில் நிகழ்த்தப்பட்டது. 

பௌத்த மதத்தின் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரின் ரக்காயின் பிராந்தியத்தில் வாழும் சிறுபான்மையின சமூகமான ரொஹிங்கியா முஸ்லீம்களை இலக்கு வைத்து கடந்த சில ஆண்டுகளாக  மேற்கொள்ளப்பட்டுவரும் இனக்குழு மற்றும் படை நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன.

இந்த படை நடவடிக்கையின் போது ரொஹிங்கியா முஸ்லீம்கள் மீது  மியன்மார் இராணுவம் இனப்படுகொலைக்கு உட்படுத்தி வருவதுடன் சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டவிரோதப் படுகொலைகள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக சர்வதேச ரீதியில் தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக நிராகரித்துவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையிலான தற்போதைய மியன்மார் அரசும் மியன்மார் இராணுவமும் இன்றும் ரொஹிங்கியா முஸ்லீம்க்ள மீதான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.

கடந்த மாதம் 25ம் தேதியிலிருந்து இதுவரை 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொஹிங்கியா இன மக்கள் பங்களாதேஷிற்குள் குடிபெயர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் தேடி வருவதாகவும், வெளியேறும் மக்களுள் 60 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது, யுனிசெஃப் அமைப்பு.

ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் இடப்பற்றாக்குறை மட்டுமல்ல, குடிதண்ணீர், உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக உரைக்கும் ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு, தண்ணீரால் பரவும் நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது எனவும் கூறுகிறது.

பங்களாதேஷில் அடைக்கலம் தேடியுள்ள ரொஹிங்கியா குழந்தைகளுக்கு தேவையான உணவு, குடிநீர், சவக்காரம், துணிகள், செருப்புகள் போன்றவைகளை வழங்கிவரும் யுனிசெஃப் அமைப்பு, பங்களாதேஷ் குடிநீர் விநியோக அதிகாரிகளுடன் இணைந்து,  நீர் சுத்திகரிப்புப் பணிகளிலும் உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 மாதங்களுக்கு ரொஹிங்கியா குழந்தைகளுக்கான அவசர கால உதவிகளுக்கு 73 இலட்சம் டாலர்கள் தேவைப்படுவதாகவும் அறிவித்துள்ளது யுனிசெஃப்.


No comments

Powered by Blogger.