Header Ads



வீதியோரங்களில் இந்து, பௌத்த, கிறிஸ்த்தவ தெய்வங்களை வைப்பதனால் பிரச்சினை


“வீதியோரங்களில், அனுமதியற்ற வகையில், இந்து, பௌத்த, மற்றும் கிறிஸ்த சமயங்களின் தெய்வங்களை, வைப்பதன் காரணமாக, சமூகங்களுக்கு இடையில் வீண் பிரச்சினைகள் எழுவதாக”, யாழ்ப்பாணம் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று, யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் (23) நடைபெற்றது.   

கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.   

இந்த சந்திப்பு தொடர்பில், ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செயற்பட்டுவந்த, ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக, பொலிஸ் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.    அத்துடன், வீதிகளில் மக்களுக்கு, மது போதையில் இடையூறு விளைவிப்போர் மற்றும் போதைவஸ்து பாவனையாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.   

எனினும், தமிழ் பேசும் பொலிஸார், குறைவாக காணப்படுவதனால், தமிழ் மொழில் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ஆளுநரின் கவனத்துக்கு, பொலிஸ் அதிகாரிகள் கொண்டுவந்தனர்.   

மேலும், அனுமதியற்ற வகையில் வீதியோரங்களில், இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்த சமயங்களின் தெய்வங்களை அமைப்பதன் காரணமாக, சமூகங்களுக்கு இடையில் வீண் பிரச்சினைகள் எழுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.   

இங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே,   

“தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வடக்கு வாழ் தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள அனைத்து தரப்பினரும் இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.   

“முக்கிய நகரங்கள் மற்றும் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்காண்பதற்காக, சி.சி.டி.வி கமெராக்களை பொருத்துவதற்கு, ஆலோசித்துள்ளதாகவும். அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும்” ஆளுநர் கூறினார்.   

”வீதியோரங்கள் மற்றும் மரங்களின் கீழ் ஆங்காங்கே, அனுமதியற்ற வகையில், வைக்கப்பட்டு வரும்,சிலைகள் தொடர்பில் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்” என்றும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Alhamdulillah..... True GOD is pure from all these created Falls Gods of people as per their desiers.

    ReplyDelete

Powered by Blogger.