Header Ads



பூசாவில் உள்ள ரோஹின்யர்களுக்கு, அடிப்படை வசதிகள் இல்லை - ம.உ.ஆ குற்றச்சாட்டு

-Dc-

பௌத்த பிக்குகள் சிலரின் அச்சுறுத்தலுக்குள்ளான 31 மியன்மார் பிரஜைகள் தற்பொழுது தங்கவைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ இராணுவ மத்திய நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாது காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் உட்பட பலர் நேற்று (28) பூஸ்ஸ இராணுவ மத்திய நிலையத்துக்கு சென்று மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் பின்ன இந்த தகவலை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

குறித்த இடம்  தங்கவைப்பதற்கான வசதிகள் அற்ற நிலையில் காணப்படுவதாகவும், உடன் அந்த இடத்திலிருந்து மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு அதிகாரிகளைக் கேட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் ஒன்றை நடாத்த பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.