Header Ads



விஜே­தாஸ எந்தப்பக்கம் அமருவார்..? ரெடியாகும் ரோசி

பாரா­ளு­மன்­றத்தில் இன்­றைய தினம் -06-  எதி­ரணி ஆச­னத்தில் விஜே­தாஸ ராஜ­பக் ஷ அமர்ந்தால் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை கேள்­விக்­கு­றி­யாக்­கப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   இந்த விடயம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் மத்­திய செயற்­குழு உறுப்­பி­னர்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாஸ ராஜபக் ஷவின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை குறித்து ஐக்­கிய தேசிய கட்சி கவ­னத்தில் கொண்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது ஆளும் தரப்பு பின்­வ­ரிசை ஆச­னத்தில் அமரும் பட்­சத்தில் அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை பாது­காக்­கப்­படும். ஆனால் எதி­ர­ணியில் அமர்ந்தால் கட்­சியின் அடிப்­படை உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி சவா­லுக்கு உட்­படும்.

எனவே இந்த விடயம் தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சியின் மத்­திய செயற்­குழு உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது விஜே­தாஸ ராஜ­பக் ஷ எதிர்க்கட்சி ஆச­னத்தில் அமர்ந்தால்  அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கவும் அந்த வெற்­றி­டத்­திற்கு ரோசி சேனா­நா­யக்­கவை தெரிவு செய்­யவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

நீதி மற்றும் பௌத்த சாசன முன்னாள் அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ அமைச்­ச­ரவை கூட்­டுப்­பொ­றுப்பை   மீறி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு அண்­மையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இதன் பின்னர் அவரை  அமைச்சர் பத­வியில் இருந்து நீக்­கு­வதற்கு ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோ­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­ம­தி­ய­ளித்தார்.

தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் நட­வ­டிக்­கை­களில் இருந்து ஒதுங்­கி­யுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ­வுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு  கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இவ்வாறானதொரு நிலைமையிலேயே அவரது பாராளு மன்ற உறுப்புரிமை குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கருத்தில் கொண் டுள்ளமை குறிப் பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.