Header Ads



ஜம்இய்யத்துல் உலமா கண்டி கிளையின் ஏற்பாட்டில், மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் பரீட்சைகளில் சிறந்த பெருபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கு ஒரு நிகழ்வு சென்ற 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக்கிளையின் தலைமை பீடம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களும், மாவட்டத்தின் 13 பிரதேசக் கிளை உறுப்பினர்கள் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷைக் எம்.இரான் நழீமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் தமதுரையில்: இன்றைய தலைமுறையினரை கல்வியின் பால் உற்சாகமூட்டுவது எமது பாரிய கடமையாகும். கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகொழும்பாகும். ஏதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்பவும், வளாந்து வருவோருக்கு சரியான பாதையைக் காட்டி அவர்களை நேர்வழிப்படுத்துவதுமே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பெருபேறுகளின் அடிப்படையில் நோக்கும் போது ஆண்களை விட பெண்கள்; தேர்ச்சியின் விகிதாசாரமே அதிகம். பெண்கள் கல்வியில் காட்டுகின்ற ஆர்வம் போலவே ஆண்களும் அதிகம் அக்கரை காட்ட வேண்டும். சமுகமளித்திருக்கும் பெற்றோர்கள் உங்கள் மகளின் கல்வியில் அக்கரை காட்டுவது பொலவே ஆண் பிள்ளைகளினதும் கல்வியில் அக்கரை காட்ட வேண்டும் என உருக்கமாகக் கூறினார். 

மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அடிப்படையில் இந்நகிழ்வில் சுமார் 80 மாணவ மாணவிகள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என கண்டி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் அப்துல் கப்பார் தீனி அவர்கள் தெரிவித்தார்.

தகவல்: உறுப்பினர்: அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி



No comments

Powered by Blogger.