Header Ads



மியன்மாரிய பௌத்த பயங்கரவாதத்தை, ஆதரிக்கும் இலங்கை - முஸ்லிம்களுக்கு உள்ள ஆபத்து..

மியான்மார் முஸ்லிம்கள் பர்மா நாட்டின் இராணுவப் பயங்கரவாதிகளால் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படும்போது இலங்கை அரசாங்கம் எந்தவொரு சலனத்தையும் வெளிப்படுத்தாது கனதியான மௌனத்தை மட்டுமே கடைப்பிடித்தது.

தற்போது அந்த கொலைகார பர்மிய அரசின் காட்டுமிராண்டித்தனத்தை சரிகண்டு, அதைப்பாராட்டி அதற்கான பேரணியையும் ஏற்பாடு செய்த இலங்கையின் பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மியான்மார் முஸ்லிம்களுக்கெதிரான பர்மா நாட்டின் இராணுவப் பயங்கரவாதத்தை உலகிலுள்ள பல நாடுகள் கண்டித்தும் விமர்சித்தும் இருக்கின்ற அதேவேளை இலங்கை நாட்டில் மாத்திரம் அப்பயங்கரவாதத்தை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்து அரச அனுமதியோடு பேரணி நடக்கிறது. இதன் மூலமாக மூன்று விடயங்களை நாம் அறியமுடிகின்றது.

ஒன்று: இலங்கை அரசாங்கம் பர்மா அரசின் முஸ்லிம்கள் மீதான இராணுவப் பயங்கரவாதத்தினை மௌனமாக அங்கீகரிக்கின்றதா என்றொரு இயல்பான கேள்வியை எழுப்புகின்றது.

இரண்டு: எதிர்காலத்தில் அதேபோன்றதொரு இனவேட்டை இலங்கையிலும் நடக்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் இதேபோன்றதொரு மௌன விரதத்தைத்தான் பூண்டுகொள்ளுமா? என்றொரு நியாயமான சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

மூன்று: ஜனநாயகம் என்னும் பெயரால் ஒரு பயங்கரவாதத்திற்கு எதிராக தமது கண்டனத்தையும் பகிரங்கமாக வெளியிடலாம், அதேநேரம் அந்தப் பயங்கரவாதத்திற்கு தமது ஆதரவையும் பகிரங்கமாகத் தெரிவிக்கமுடியும் என்னும் ஜனநாயகத்தின் இரட்டை வேடம் இதன்மூலம் தெளிவாகின்றது.

ஜனநாயகத்தின் இயல்பான இந்த இனவாத அழுக்குகள் இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகமோ "எங்களுக்கு ஜனநாயக வழியில்தான் தீர்வுவேண்டும்" என்று உரத்துக் கோஷம் எழுப்புகின்றது. 

"பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமாம்..."

-முஹம்மது நியாஸ்-

3 comments:

  1. In Europe people have started to learn BUDISM now they have realised the reality of it. Sri Lankan Budish political leaders and clerges fail to protect their good name.
    Better to leave it , history will give the answer to them.
    Allah is the best planer.

    ReplyDelete
  2. الماضي قد مضى، نتعلم منه.
    و المستقبل أمامنا ، نتأهب له.
    أما الحاضر فهو هنا، نعيشه

    ReplyDelete

Powered by Blogger.