Header Ads



முஸ்லிம்கள் பயிர் செய்ய, பொலிஸார் அனுமதி மறுப்பு


திரு­கோ­ண­மலை சேரு­நு­வர பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட தோப்பூர் நீணாக்­கேணி பகு­தியில் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட வேண்டாம் என பிர­தே­சத்தில் வசிக்கும் முஸ்லிம் பயிர்ச்‍­செய்­கை­யா­ளர்­களை பொலிஸார் தடுத்து நிறுத்­தி­யுள்ளனர். 

நீணாக்­கேணி பகு­தியில் உள்ள காணி உரி­மை­யா­ளர்கள் சேனைப் பயிர் செய்­வ­தற்­காக தமது காணி­களை உழவு இயந்­தி­ரத்தைக் கொண்டு உழுது கொண்­டி­ருக்கும் போது சேரு­நு­வர பொலிஸார் அவ்­வி­டங்­க­ளுக்கு வருகை தந்து பயிர் செய்­கையில் ஈடு­பட வேண்டாம் இது தொல் பொருள் திணைக்­க­ளத்­திற்­கு­ரிய காணி­யென தமது வேலை­களை நேற்று த­டுத்து நிறுத்­தி­ய­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

அத்­தோடு தாம் இப் பிர­தே­சத்தில் 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக குடி­யி­ருந்து வரு­வ­தோடு பயிர்செய்கை மேற்கொண்டு இத­னா­லேயே தாம் ஜீவ­னோ­பா­யத்தை கொண்டு செல்­வ­தா­கவும் பொது மக்கள்  தெரி­விக்­கின்­றனர்.

அதே வேளை  தமது நீணாக்­கேணி கிராம மக்கள் குடி­யி­ருக்­கின்ற காணி­களில் அதி­க­மா­னவை வில்கம் விகா­ரைக்­கு­ரிய 49 ஏக்கர் காணிக்குள் உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தாக வில்கம் விகா­ரையின் விகா­ரா­தி­பதி சேரு­நு­வர பொலி­ஸா­ருக்கு வழங்­கிய முறைப்­பாட்­டுக்­க­மை­வா­கவே இவ்­வாறு தமது பயிர் செய்கை வேலைகள் பொலி­ஸா­ரினால் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் மக்கள் தெரி­விக்­கின்­றனர். 

அதே வேளை தாம் பல வரு­டங்­க­ளாக மின்­சாரம் பெற்று வீடு­களை அமைத்து குடி­யி­ருந்து வரு­வ­தா­கவும் மக்கள் தெரிவிப்பதோடு இந்தப் பிரச்சினை நீண்டு செல்லாது இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

எம்.என்.எம்.புஹாரி

No comments

Powered by Blogger.