September 27, 2017

கல்­மு­னையை தனி மாவட்­ட­மாக பிர­க­டனம் செய்­யா­விட்டால் எனது பத­வியை துறப்பேன் - பாரா­ளு­மன்றில் ஹரீஸ் சூளுரை

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி அறிக்­கையில் கல்­மு­னையை தனி மாவட்­ட­மாக பிர­க­டனம் செய்­யா­விட்டால் குறித்த இறுதி அறிக்­கைக்கு வாக்­க­ளிக்­காது எனது பிரதி அமைச்சு பத­வியை துறந்து விடுவேன் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பிரதி அமைச்­ச­ரு­மான ஹரீஸ் சபையில் சூளு­ரைத்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம் மக்­களும் எம்.பிக்­களும் துணை போக­மாட்­டார்கள். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தடம்­பு­ரண்டு செயற்­பட்டு வரு­கின்­றது. இதன் கார­ண­மாக கிழக்கு இளை­ஞர்கள் கூட்­ட­மைப்பின் மீது விரக்தி கொண்­டுள்­ளனர். எனவே கிழக்கில் மக்­களை அணி­தி­ரட்டி போராடி வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை மீள ஒப்­ப­டைத்தல் சட்­டத்தின் கட்­ட­ளைகள், ஏற்­று­மதி சட்ட மூலத்தின் கட்­ட­ளைகள் மீதான விவாத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,  சுதந்­திர கட்­சியும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுமே வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தை எதிர்த்து வரு­கின்­றன. இது எமக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­கி­றது. 

வடக்கு கிழக்­கையும் இணைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு திட்­ட­மிட்டு வரு­கின்­றது. இந்த திட்­டத்­திற்கு நாம் ஆத­ரவு வழங்­க­மாட்டோம். தமிழ் மக்­க­ளுக்­கான 60 வருட போராட்­டத்திலிருந்து தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தடம்­பு­ரண்டு செயற்­ப­டு­கின்­றது. வேறு திசையை நோக்கிப் பய­ணித்து கொண்­டுள்­ளது.

தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் தலைவர் செல்­வ­நா­யகம், சிவ­சி­தம்­பரம் போன்றோர் கிழக்கு மக்­க­ளுக்கு தனித்த பய­ணித்­திற்கு இட­ம­ளிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­தனர். எனினும் தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நிலைப்­பாடு மாற்றம் கண்­டுள்­ளது. 

எனவே, வடக்கு கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம் மக்­களோ, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ துணை­போக மாட்­டார்கள். இது தொடர்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் பல முறை பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளன. இந்­நி­லையில் கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு கூட்­ட­மைப்பின் செயற்­பாடு அதி­ருப்தி அளிக்­கின்­றது. மேலும் இதன்­கா­ர­ண­மாக நாம் கூட்­ட­மைப்பின் மீது நம்­பிக்கை இழந்து விட்டோம். எமது இளை­ஞர்கள் விரக்­தி­யுடன் உள்­ளனர். 

வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் சுதந்­திர கட்­சி­யி­னதும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யினர் நிலைப்­பாட்டின் மீது நாம் நம்­பிக்கை வைத்­துள்ளோம். அதுவே எமக்கு நம்­பிக்கை ஒளி­யாக தெரி­கின்­றது. எனவே வடக்கு ,கிழக்கு இணைப்பு எதி­ராக கிழக்கில் மக்­களை அணி­தி­ரட்டி போராடி வடக்கு கிழக்கு இணைப்பு இடமளிக்க மாட்டோம்.

அத்துடன் புதிய அரசியலமைப்புக்கான இறுதி அறிக்கையில் கல்முனையை தனி மாவட்டமாக பிரகடனம் செய்யாவிட்டால் குறித்த இறுதி அறிக்கைக்கு வாக்களிக்காது எனது பிரதி அமைச்சு பதவியை துறந்து விடுவேன் என்றார்.

 MM.Minhaj

8 கருத்துரைகள்:

உங்கட பதவிய துரங்க நாதி போல ஓட்டாடும் பிறகு இலங்கையில் 50 மாவட்டம் ஆகொனும்

IRIKKIRA UURAYA EVANUGHLALA OLUNGA SEYYA MUDIYALA,THANI MAAWATTAM WEERU???(ENNAYYA KODUMA

What about your Dubai and Bahrain?

மல்வானையை தனி மாவட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நானும் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.

இப்படிக்கு
ரம்புட்டான் பிடுங்கி.


தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் தலைவர் செல்­வ­நா­யகம், சிவ­சி­தம்­பரம் போன்றோர் கிழக்கு மக்­க­ளுக்கு தனித்த பய­ணித்­திற்கு இட­ம­ளிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­தனர். எனினும் தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நிலைப்­பாடு மாற்றம் கண்­டுள்­ளது.


வடிகட்டிய பொய்

சாய்ந்தமருது தனி பிரதேச சபை முடிந்துவிட்டது இப்போது கல்முனை மாவவட்டம் கேக்குதோ? பழைய கதையொன்று ஒருவன் மாட்டுப் பட்டிக்காறனிடம் பட்டிக்கு போய் கொஞ்சம் பால் கொடு என்று கேட்டானாம் அதற்கு பட்டிக்காறன் இங்கே பால் தர முடியாது எனது வீட்டுக்கு வா பசுவும் கன்றும் தருகிறேன் என்றானாம் .

வடகிழக்கு இணைப்பு சாத்தியம் உண்டோ இல்லையோ.இலங்கையில் முஸ்லீம் மாவட்டம் சாத்ததியமில்லை.இலங்கையில் அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து உண்டு எனவே மொழிரீதீயான கோரிக்கைகளுக்கு தடையில்லை.ஆனால் மதரீதியான கொரிக்கைகளுக்கு தடை உண்டு.

ஐயா மக்கள் விழிப்பாகத்தான் உள்ளாரகள்.

Post a Comment