Header Ads



இப்படியும் ஒரு பேராசிரியர்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள தென்மேற்கு பகுதியில் உள்ள குய்ஜோவு மாகாணத்தில் வசிப்பவர் ஹூ மிங். பள்ளி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் இவர், மறதி நோயால் அவதிப்படும் தனது 80 வயது தாயை தன்னுடன் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறார்.

மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய், தனிமையில் வாடக்கூடாது என்பதற்காக அவரை கூடவே அழைத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார். வகுப்பறையில் மாணவர்களுக்கு ஹூ மிங் பாடமெடுக்கும் போது, அவரது தாய் கடைசி பெஞ்சில் அமர்ந்து இருப்பார் என மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி சீனாவில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றான வெய்போ-வில் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. தாயை தன்னுடன் அழைத்து வருவதற்கு பள்ளி எதிர்ப்பு தெரிவிக்கவில்ல என கூறியுள்ள ஹூ மிங், பள்ளி நிர்வாகம் எனக்கும் எனது தாய்க்கும் ஆதரவாகவே இருந்து வருகிறது என்கிறார்.

நான் வகுப்பு எடுக்கும் போது சில நேரங்களில் என்னை கவனித்த படி இருக்கும், என் அம்மா பல நேரங்களில் தூங்கியபடி தான் இருப்பார் என ஹூ மிங் வேடிக்கையாக கூறியுள்ளார்.

வெய்போ-வில் இந்த செய்தி அதிகம் முறை பகிரப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. பேராசிரியர் ஹூ மிங் எல்லோருக்குமான மாதிரியாக இருந்து வருகிறார். வகுப்பறையோ, வெளியேவோ அவர் சிறந்த பாடங்களையே கற்பித்து வருகிறார் என்று பலர் அந்த செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.